'ரிடையர்மென்ட்' அவ்ளோ மோசமில்லை பாஸ்... கல்லிஸுக்கு சச்சின் 'மெசேஜ்'
டெல்லி: ஓய்வு வாழ்க்கை அவ்வளவு மோசமானதாக இல்லை என்று லேட்டஸ்டாக ஓய்வை அறிவித்துள்ள தென் ஆப்பிரிக்க வீரர் ஜேக்கஸ் கல்லிஸுக்கு செய்தி அனுப்பியுள்ளார் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஓய்வுக்குள் நுழைந்த சச்சின் டெண்டுல்கர்.
கல்லிஸை வாழ்த்தி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள சச்சின், அதில்தான் இப்படிக் கூறியுள்ளார் ஜாலியாக.
இந்தியாவுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடை பெற்றுள்ளார் கல்லிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லிஸுக்குப் புகழாரம்
கல்லிஸுக்கு சச்சின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

உண்மையான சாம்பியன்
கல்லிஸ் உண்மையான சாம்பியன். அவரது அருமையான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகள். கிரிக்கெட்டை சரியான முறையில் விளையாடியவர் கல்லிஸ்.

உங்களுக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சி
கல்லிஸுக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சி தருகிறது. ஜேக்கஸ், நீங்கள் ஒரு உண்மையான சாம்பியன்.

ஓய்வு அவ்வளவு மோசமில்லை
ஓய்வு வாழ்க்கை அவ்வளவு மோசமானது அல்ல... என்று கூறியுள்ளார் சச்சின்.

18 வருட கால கிரிக்கெட்
கல்லிஸ் 18 வருடம் கிரிக்கெட் ஆடியுள்ளார். இவரது கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றிகரமாக அமைந்தது. அதில் கல்லிஸ் ஒரு அபார சதமும் போட்டார் என்பது நினைவிருக்கலாம்.

3வது அதிக ரன் குவித்த வீரர்
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் கல்லிஸ் 3வது இடத்தைப் பிடித்த கையோடு விடை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அருமையான ஆல் ரவுண்டர்
கல்லிஸ் ஒரு அருமையான ஆல் ரவுண்டர். 166 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13,289 ரன்களைக் குவித்துள்ளார். இவருக்கு முன்பு சச்சின் முதலிடத்திலும், ரிக்கி பான்டிங் 2வது இடத்திலும் உள்ளனர்.

292 விக்கெட்கள்
பந்து வீச்சில் 292 விக்கெட்களையும், 200 கேட்ச்களையும் பிடித்தும் இருக்கிறார் கல்லிஸ். டெஸ்ட் போட்டிகளில் 45 சதங்களையும் அடித்துள்ளார். இந்த விஷயத்தில் 51 சதம் போட்ட சச்சினுக்கு அடுத்த இடத்தில் கல்லிஸ் இருக்கிறார்.

ஒரு நாள் போட்டிகளில் ஆடுவார்
டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டும்தான் கல்லிஸ் விடை பெற்றுள்ளார். அவர் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார்.


Click it and Unblock the Notifications