Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடே மறுபடியும் சச்சின்... மும்பை வீரர்களுக்கு டிப்ஸோ டிப்ஸ் தருகிறார்!

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் செம குஷியாக உள்ளனர். காரணம், ரிடையர்ட் ஆகிப் போன சச்சின் மீண்டும் மும்பை அணியுடன் இரண்டறக் கலந்து டிப்ஸ்களை அள்ளி அள்ளிக் கொடுப்பதால்.

அபுதாபிமியில் முகாமிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் சச்சினும் இணைந்துள்ளார். வீரர்களை ஊக்குவித்தும், டிப்ஸ்களைக் கொடுத்தும் உற்சாகப்படுத்துகிறார்.

மும்பை அணியின் கேப்டனாக இருந்தவர் சச்சின். பின்னர் முக்கிய வீரராகவும் ஜொலித்தவர். கடந்த ஆண்டு தனது அணி சாம்பியன் ஆன கையோடு ஐபிஎல்லுக்கு முழுக்கும் போட்டவர்.

இருப்பினும் தற்போது மும்பை அணியை உற்சாகப்படுத்துவதற்காக அவர் அபுதாபிக்கு வந்துள்ளார்.

பயிற்சியின்போது சச்சின்

பயிற்சியின்போது சச்சின்

மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் பயிற்சியின்போது சச்சினும் கூட இருந்தார். பல டிப்ஸ்களை வீரர்களுக்கு அவர் கொடுத்தார்.

மும்பை அணியின் ஐகான்

மும்பை அணியின் ஐகான்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐகானாக சச்சினை சமீபத்தில்தான் அணி நிர்வாகம் அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.

அரை மணி நேரம் பயிற்சியில்

அரை மணி நேரம் பயிற்சியில்

வீரர்களுடன் அரை மணி நேரம் பயிற்சியின்போது உடன் இருந்தார் சச்சின்.

கான்சன்ட்ரேட்.. கான்சன்ட்ரேட்

கான்சன்ட்ரேட்.. கான்சன்ட்ரேட்

அணி வீரர்களுக்கு ஆட்டத்தில் கவனத்தை திசை திருப்பாமல் செயல்படுவது எப்படி என்பது குறித்து நிறைய டிப்ஸ் கொடுத்தாராம் சச்சின்.

ரோஹித்து.. இப்படி ஆடு ராசா

ரோஹித்து.. இப்படி ஆடு ராசா

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் நிறைய டிப்ஸ் கொடுத்தாராம் சச்சின். அதேபோல கீரன் போலார்டுக்கும் டிப்ஸ் கொடுத்தார். மலிங்காவுக்கும் பவுலிங் டிப்ஸ் கொடுத்தார்.

பயிற்சியாளருக்கும் டிப்ஸப்பா...

பயிற்சியாளருக்கும் டிப்ஸப்பா...

அதேபோல பயிற்சியாளர் ஜான் ரைட்டுடனும் பேசிக் கொண்டிருந்தார் சச்சின். ஒரு வேளை அவருக்கும் ஏதாவது டிப்ஸ் கொடுத்தாரா என்று தெரியவில்லை.

கெலிச்சா போதும் பாஸ்

கெலிச்சா போதும் பாஸ்

இன்று மும்பை அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கிறது. அதில் அது வென்று வெற்றியுடன் தனது 7வது ஐபிஎல் பயணத்தைத் தொடங்குமா என்பதைப் பொறுத்திருந்து ராத்திரியில் பார்ப்போம்...

Story first published: Wednesday, April 16, 2014, 14:17 [IST]
Other articles published on Apr 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+