Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மலிங்காவின் மண்டையை பார்க்காதீர்கள்.. மனதை பாருங்கள்: சச்சின் பளிச் விளக்கம்

ஹைதராபாத்: இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உலக தரமிக்க பந்து வீச்சாளர் மட்டுமின்றி, சிறந்த ஜென்டில்மேன் என்று மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வித்தியாசம்

வித்தியாசம்

உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர் யார் என்று கூறுவது கஷ்டமான விஷயம். மலிங்கா மிகச்சிறந்த பவுலராக செயல்பட்டுவருகிறார். அவரது பந்து வீச்சு ஸ்டைல் மிகவும் வித்தியாசமானது. உலகிலுள்ள எந்த ஒரு பவுலரும் அவரது பந்து வீச்சு ஸ்டைல் போல வீசி பார்த்ததில்லை.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

மலிங்கா உலக தரம் உள்ள பந்து வீச்சாளர். உண்மையான சாம்பியன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்காவுடன் இணைந்து ஆடும் வாய்ப்பு கிடைத்தது சிறந்த அனுபவமாகும். மலிங்கா பக்கா ஜென்டில்மேன்.

மண்டையை பார்க்காதீர்கள்

மண்டையை பார்க்காதீர்கள்

மலிங்காவின் பந்து வீசும் முறை வித்தியாசமாக இருப்பதால், எப்படி சரியாக கணித்து ஆடுவது என்று என்னிடம் பலரும் கேட்டுள்ளனர். நான் அவர்களிடமெல்லாம், 'மலிங்காவின் தலையிலுள்ள கொண்டையை பார்க்காமல் பந்தை பார்த்து ஆடுங்கள்' என்று தெரிவித்துள்ளேன்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் விளையாட நானும் அணி வீரர்களும் மிகவும் விரும்புவோம். அதற்கு காரணம் இங்கு கிடைக்கும் டேஸ்டான பிரியாணி. எனது குடும்பத்தாருடன் ஹைதராபாத் பாலாக்னுமா மாளிகையில் இரு நாட்கள் தங்கியுள்ளேன். அது ஒரு சிறந்த அனுபவம்.

பஸ் மிஸ்சா?

பஸ் மிஸ்சா?

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் பார்க்க போன இடத்தில் பஸ்சை மிஸ் செய்துவிட்டேன் என்று டிவிட்டரில் விளையாட்டாகத்தான் கூறியிருந்தேன். அதற்குள் ரசிகர்கள் பதறிவிட்டனர். பிறகு அது ஜோக் என்று மீண்டும் போஸ்ட் செய்திருந்தேன். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

Story first published: Wednesday, August 5, 2015, 16:40 [IST]
Other articles published on Aug 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+