Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைவனோட மேட்ச்னா உசுரைக் கொடுத்து பார்ப்போம்.. எங்க அம்மாச்சி டெண்டுல்கர் வந்துட்டானானு கேக்கும்!

மும்பை : சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் ஆன நிலையில், அவரை கொண்டாடி வரும் ரசிகர்கள் இணையத்தில் சச்சின் குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் நம் தமிழ்நாட்டு சச்சின் ரசிகர்கள் சுவாரசியமான சச்சின் ட்வீட்களை பகிர்ந்து உள்ளனர். அவற்றில் சில -

தலைவன் சச்சின்

இன்னைக்கு கிரிக்கெட் பேட்டை கைல தொடுற பையன் பொண்ணு கூட தலைவன் சச்சின் மாறி ஆகணும்னு தான் ஆசைப்படுவாங்க தலைவன் பண்ண சாதனை அப்படி

பவுன்சர்

பந்தை பாதி பிட்சில் எறிந்து பவுன்சராக்கினால் போதும், மொத்த இந்தியா டீமும் சரண்டர் ஆகிடும் அப்படின்னு மத்த டீம் சிரிச்சிட்டு இருந்தப்போ ஒருத்தன் வந்தான். மற்ற அத்தனை டீமும் அவன் காலில் விழுந்து சரண்டராச்சி!

அம்மாச்சி

கிரிக்கெட் விளையாட தெரியாது. இருந்தாலும் எங்க டீம்ல நானும் ஒரு கட்டாய பிளேயர், ஆனா தலைவனோட மேட்ச்னா உசுரைக் கொடுத்து பார்ப்போம், எங்க அம்மாச்சி என்ன டெண்டுல்கர் வந்துட்டானானுதான் கேக்கும்!!! அந்த பெருமையெல்லாம் என் தலைவனுக்குதான் சேரும்...

கிரிக்கெட்டின் கடவுள்

இந்த சிறுவனால் என்ன சாதிக்க முடியும் என்று நினைத்த உலகத்துக்கு தான் ஒரு கிரிக்கெட்டின் கடவுள் என்று உணர்த்தி விட்டு சென்றவர்

பாட்சா மீம்

சச்சின் ஆடிய காலத்தில் மெக்கிராத், ஷேன் வார்னே, முரளிதரன், ஆலன் டொனால்டு, ஷேன் பான்ட், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், நிடினி, சமிந்தா வாஸ், கில்லெஸ்பி, பிரெட் லீ என பல தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் தனி ஆளாக சச்சின் சமாளித்ததை குறிப்பிட்டு, பாட்சா படத்தை வைத்து மீம்ஸ் போட்டுள்ளார் ஒரு ரசிகர்.

சச்சினால தான் கிரிக்கெட்

உண்மைய சொன்னா முரட்டு வெறியா.. நான்லாம் கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சதே சச்சினால மட்டும் தான்!

வளர்ச்சி

உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்கும் சச்சின் பிடிக்கும், பிடிக்கலைனா அவன் ஒரு நல்ல கிரிக்கெட் ரசிகனாவே இருக்க மாட்டான். சச்சின் இல்லனா இந்தியால கிரிக்கெட் இவ்ளோ பெரிய வளர்ச்சியை பெற்றிருக்காது.

கடவுள் தான் சச்சினு

90களில் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் குறித்த பதாகை ஏந்தி வரும் ரசிகர்கள் வித்தியாசமாக சச்சின் பற்றி எழுதுவார்கள். அதில் ஒரு அலப்பறையை சுட்டிக் காட்டி இருக்கிறார் இந்த ரசிகர். "சச்சின் கடவுள் இல்லை.. கடவுள் தான் சச்சினு" என காமெடி மீம் போட்டுள்ளார்.

Story first published: Friday, November 15, 2019, 12:39 [IST]
Other articles published on Nov 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+