மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வது வயதில் முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாடினார். 1989 ஆம் ஆண்டு 16 வயதான சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னிங்சில் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு சச்சின் இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 50 சதம், 68 அரை சதம் அடங்கும். அதே போன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 463 போட்டியில் விளையாடியுள்ள சச்சின் 18,426 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் 49 சதம், 96 அரைசதம் அடங்கும்.இந்திய அணிக்காக ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய சச்சின் 10 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியில் ஜாம்பவானாக அறியப்படும் சச்சின் இந்திய அணிக்கு அறிமுகமானதற்கு 2 ஆண்டுகள் முன்பாகவே பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவின் ஐம்பதாவது ஆண்டு முன்னிட்டு மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானில் பங்கேற்ற நட்பு ரீதியான ஒரு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தலா 40 ஓவர்கள் கொண்டதாகும். இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியாண்டட் மற்றும் அப்துல் காதிர் ஆகியோர் மதிய உணவு சாப்பிடுவதற்காக போட்டியை விட்டு விலகி விட்டனர்.
இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் கான் இந்திய வீரர்கள் இரண்டு பேரை பில்டிங்கிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.இதனை அடுத்து அப்போது மைதானத்தில் பந்து எறியும் சிறுவனாக நின்று கொண்டிருந்த 14 வயது வீரர் சச்சினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து சர்ச்சை பாகிஸ்தான் அணிக்காக 25 நிமிடம் வரை பில்டிங்கில் நின்று இருக்கிறார்.
அப்போது இந்திய அணியின் முக்கிய வீரரான கபில்தேவ் அடுத்த பந்தை சச்சின் டெண்டுல்கர் கேட்ச் பிடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
மேலும் சச்சினை லாங் பொசிஷனில் நிற்குமாறு இம்ரான் கான் கூறியிருக்கிறார். இது அப்போது சச்சினுக்கு ஒரு கனவு போல் இருந்தது. இதை அனைத்துமே சச்சின் தன்னுடைய வாழ்க்கை சுயசரிதையான பிளேயிங் இட் மை வே என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
அந்த புத்தகத்தில் தான் லாங்கான் பகுதிக்கு பதில் மிட் ஆன் பகுதியில் நிற்க வைக்கப்பட்டு இருந்தால், பாகிஸ்தான் அணிக்காக ஒரு விக்கெட் கூட நான் எடுத்திருப்பேன் என்று கிண்டலாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தாம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியதை இம்ரான் கான் கண்டிப்பாக தற்போது நினைவில் வைத்திருக்க மாட்டார் என்றும் சச்சின் டெண்டுல்கர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.