Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அட இதுதாங்க பிரச்னை.. சரி பண்ணுங்க”.. இந்திய அணியின் தவறை சுட்டிக்காட்டிய சச்சின்.. கேட்பாரா கோலி!

அமீரகம்: டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி செய்யும் தவறு குறித்து முன்னாள் வீரர் சச்சின் விளக்கமளித்துள்ளார்.

இந்த முறை மிகவும் பலமான அணி, கோப்பையை வெல்லும் அணி எனக்கூறப்பட்ட இந்தியாவே தற்போது படு மோசமாக விளையாடி வருகிறது.

குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததே கிடையாது என்ற பெருமையை இந்தியா இழந்துவிட்டது.

சொதப்பும் இந்தியா

சொதப்பும் இந்தியா

இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகவும் மோசமாக சொதப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி மட்டுமே நின்று அணியை காப்பாற்றினார். ஆனால் நியூசிலாந்து போட்டியில் ஒருவர் கூட பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால் கோலி மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்திய அணிக்கு தற்போது பெரும் பிரச்னையாக பார்க்கப்படுவது அவர்கள் நம்பிக்கையின்றி விளையாடுவதுதான். சரியான மனநிலையுடன் இல்லாமல் அனைத்து வீரர்களும் செயல்பட்டு வருவதால் கோலியை குறை கூற வேண்டாம் என முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி சொதப்புவது குறித்து சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Md Azharuddin slams Virat Kohli for skipping presser after NZ loss | Oneindia Tamil
அந்த இடம் தான் பிரச்னை

அந்த இடம் தான் பிரச்னை

இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணிக்கு இது ஒரு கடினமான காலமாக இருந்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 முதல் 10வது ஓவர் வரை இந்திய அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. சுலபமான சிங்கில்களை கூட எடுக்க முடியவில்லை. அந்த இடத்தில்தான் நாம் ஆட்டத்தை இழந்தோம்.

நெருக்கடி

நெருக்கடி

இதனால், பெரிய ஷாட்களை அடித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டபோது, விக்கெட்டுகளை இழந்தோம். நியூசிலாந்து அணியின் லெக் ஸ்பின்னர்களை இந்திய வீரர்களால் எதிர்கொள்ளவே முடியவில்லை. அவர்கள் கூக்ளீஸ், டாப் ஸ்பின், ஃப்ளிப்பர் என மாற்றி மாற்றி வீசினர். கடந்த சில ஆண்டுகளாக இந்த யுக்தியையே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர்.

சரி செய்ய வேண்டும்

சரி செய்ய வேண்டும்

இஷ் சோதி மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தினார். மற்றொரு புறம் அவருக்கு உறுதுணையாக சாண்ட்னர் சிறப்பாக வீசினார். அவர்கள் இருவரும் சேர்ந்து 8 ஓவர்களில் மொத்தம் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். இதனை இந்தியா சரிசெய்ய வேண்டும். மொத்தத்தில் நியூசிலாந்து அணி பவுலிங்கில் செலுத்திய உத்தியை இந்திய அணி செலுத்த தவறி விட்டது.

சச்சின் நம்பிக்கை

சச்சின் நம்பிக்கை

இதே போன்று பல்வேறு நாட்களை இதற்கு முன் நாம் சந்தித்து உள்ளோம். நாம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டால், சில நாட்களில் அது மோசமாக தான் செல்லும். எனவே இதனை கண்டு இந்திய வீரர்கள் சோர்ந்து அமரக்கூடாது. முடிந்ததை மறந்தே தீர வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, November 2, 2021, 20:14 [IST]
Other articles published on Nov 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+