For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் ஸ்கொயர் கட் அடிச்சு பாத்திருப்பீங்க.. இந்த "கட்"டைப் பாத்திருக்கீங்களா.. வாங்க சார் வாங்க!

மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள விளையாட்டு வீரர்கள், ஹேர் ஸ்டைலிஸ்ட்களாக தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

Recommended Video

ஐபிஎல்-ன் சிறந்த கேப்டன் இவங்க தான்... வெளியான தகவல்

சமீபத்தில், தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவிடம் நம்பி, தன்னுடைய தலையை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார் கேப்டன் விராட் கோலி. என்ன என்கிறீர்களா? நல்ல ஹேர்ஸ்டைலைத்தான்.

தற்போது இந்த வரிசையில் இறங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். தன்னுடைய தலைமுடியை தானே சிறப்பாக வெட்டிக் கொண்டு அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அவர்.

100 சர்வதேச சதங்கள்

100 சர்வதேச சதங்கள்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், தற்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சர்வதேச அளவில் இந்தியாவிற்காக இவர் 100 சதங்களை அடித்தவர். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.

ரூ.50 லட்சம் நிதியுதவி

ரூ.50 லட்சம் நிதியுதவி

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய அரசு தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் அரசுக்கு கைகொடுக்கும்வகையில், பிரதமர் நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிதி ஆகியவற்றிற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதேபோல மாதத்திற்கு 5,000 பேருக்கு உணவளிக்கவும் உறுதி அளித்துள்ளார்.

வீட்டிற்குள் முடங்கிய சச்சின்

வீட்டிற்குள் முடங்கிய சச்சின்

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவிலும் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீரர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். சச்சின் டெண்டுல்கரும் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக அவர் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ஸ்கொயர் கட் முதல் ஹேர்கட் வரை

ஸ்கொயர் கட் முதல் ஹேர்கட் வரை

இதனிடையே சச்சின் டெண்டுல்கர், தனக்கு தானே புதிய ஹேர்கட்டை செய்துள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், ஸ்கொயர் கட் முதல் ஹேர்கட்வரை வித்தியாசமான விஷயங்களை கொண்டாட்டத்துடன் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அதிகளவில் அளித்துள்ளனர்.

Story first published: Monday, April 20, 2020, 11:47 [IST]
Other articles published on Apr 20, 2020
English summary
Sachin Tendulkar gave himself a New Haircut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+