Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்??.. சச்சின் டெண்டுல்கர் அட்டகாச கணிப்பு.. காரணங்கள் இதோ!

மும்பை: டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெறும் சூழலில் சூப்பர் 12 சுற்று வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்ற அணிகள் பயிற்சி போட்டிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது. இதே போல பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது. இதே போல நியூசிலாந்து அணியும் நல்ல பலத்தில் இருப்பதால் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சச்சினின் கணிப்பு

சச்சினின் கணிப்பு

இந்நிலையில் அதுகுறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார். நேர்காணலில் பேசிய அவர், முதலில் இந்தியா - பாகிஸ்தான் முதல் போட்டி குறித்து கூறுகிறேன். இதில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என தோன்றுகிறது. நான் ஒரு இந்தியன் என்பதால் இதனை கூறவில்லை. இரு அணிகளின் பலத்தை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய களத்தில் இந்தியா நன்றாக செயல்படும் எனத்தோன்றுகிறது.

அரையிறுதி சுற்று

அரையிறுதி சுற்று

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் என்று பார்த்தால், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் முன்னேறும் எனத்தெரிகிறது. நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளையும் நம்ப முடியாது. இதே கால சூழல்களில் தான் தென்னாப்பிரிக்காவிலும் இருக்கும் என்பதால் அந்த அணி வீரர்கள் சாதிப்பதற்கு வாய்ப்புள்ளது.

யாருக்கு கோப்பை?

யாருக்கு கோப்பை?

இந்திய அணிக்கு கோப்பை வெல்ல நல்ல வாய்ப்புகள் உண்டு. தற்போதுள்ள இந்த அணி நன்கு சமநிலையுடன் இருக்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளும் சம அளவில் பொருந்தியுள்ளது. இதனால் கோப்பையை இந்திய அணி வெல்லும் என எனக்கு தோன்றிக்கொண்டே உள்ளது என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 18, 2022, 10:36 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+