Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜூன் டெண்டுல்கரின் அறிமுக சதம்.. சச்சின் ஆனந்த கண்ணீர்.. என்ன சொன்னார் தெரியுமா?

மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போலவே அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சிப் போட்டியின் அறிமுக ஆட்டத்தில் சதம் விளாசி அசத்தியிருக்கிறார்.

கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங் வரிசையில் ஏழாவதாக இறங்கி 178 பந்துகளை எதிர் கொண்டு 100 ரன்களை அடித்தார்.

34 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கரும் இதே போல் ரஞ்சி கோப்பையில் அறிமுக ஆட்டத்தில் சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 தந்தையை நினைக்கிறேன்

தந்தையை நினைக்கிறேன்

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் இடம் அர்ஜுனனின் சாதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சச்சின் டெண்டுல்கர், அர்ஜுன் குறித்து யாரும் இப்படி கேள்வியை என்னிடம் கேட்டதில்லை. ஒரு தந்தையாக நான் என் தந்தை சொன்னதை தான் இப்போது நினைக்கிறேன். நான் இந்தியாவுக்காக விளையாடிய காலகட்டம் அது. அப்போது சச்சின் உடைய தந்தை இது என்று அவருடைய நண்பர் வேறு ஒருவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சிறந்த தருணம்

சிறந்த தருணம்

அப்போது சிலர், சச்சினின் தந்தை என்று மகனை வைத்து அறிமுகம் செய்யும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கு எனது தந்தை , என் வாழ்நாளில் சிறந்த தருணம் என்று கூறினார் .தனது மகன் செய்த சாதனைகளை வைத்து அவர்களது தந்தையை அடையாளம் காணவே ஒவ்வொரு தந்தையும் விரும்புவார் என்று அப்போது அவர் கூறினார். இந்த காட்சிகள் தான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

 அழுத்தம் இருந்தது

அழுத்தம் இருந்தது

அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு சாதாரண குழந்தையாக வளரவில்லை. கிரிக்கெட் வீரரின் மகனாக இருந்ததால் அவருக்கு பெரிய அளவிலான அழுத்தம் இருந்தது. அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டத்தை அனைவரும் எதிர்நோக்கி பார்த்திருந்தார்கள். நான் ஓய்வு பெற்ற போது அர்ஜுன் குறித்து அப்போது சிலர் கேள்வி எழுப்பினார்கள். அப்போது நான் பத்திரிக்கையாளர்களிடம் கொஞ்சம் பொறுங்கள், அவர் மீது எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தாதீர்கள் என்று பதில் அளித்தேன்.

 அறிவுரை வழங்கினேன்

அறிவுரை வழங்கினேன்

ஏனென்றால் எனது தாய் , தந்தை எனக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு கிரிக்கெட் விளையாட முழு சுதந்திரம் அளித்தார்கள். அதன் மூலம் தான் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. என் மீது எந்த அழுத்தமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மாறாக எனக்கு ஆதரவும், உத்வேகம் அளிக்கக் கூடிய நபர்கள் தான் இருந்தார்கள். ஆனால் அர்ஜுன் டென்டுல்கருக்கு அப்படி அல்ல. இதை நீ சவாலாக எடுத்து விளையாட வேண்டும் என்று நான் அப்போதே அவருக்கு அறிவுரை வழங்கினேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

Story first published: Thursday, December 15, 2022, 23:49 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+