ஆசிர்வாதம் வாங்கிய போது அம்மா தந்த பரிசு.. விலைமதிக்க முடியாதது.. நெகிழ்ந்து உருகிய சச்சின்
மும்பை : உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக வலம் வந்த சச்சின் டெண்டுல்கர், தன் தாய் தனக்கு அளித்த பிறந்தநாள் பரிசு பற்றி நெகிழ்ந்து போய் இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் கடந்த ஏப்ரல் 24 அன்று தன் 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அன்று காலையில் தன் தாயிடம் ஆசிர்வாதம் வழங்கிய போது அவர் அளித்த பரிசை விலைமதிக்க முடியாதது எனக் கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர் கூட்டம்
சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பின்னும் அவருக்கான ரசிகர் கூட்டம் அப்படியே இருந்தது தான் ஆச்சரியம். சச்சின் 47 வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். அவரது ரசிகர்கள் சச்சின் பிறந்தநாளை குறிப்பிட்டு அவரது சாதனைகளை பட்டியலிட்டு வந்தனர்.

கொண்டாட்டம் இல்லை
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன் பிறந்தநாளை கொண்டாடப் போவது இல்லை என அறிவித்து இருந்தார். அதே போல, அன்றைய தினம் பெரிய கொண்டாட்டம் ஏதும் செய்யவில்லை.

அந்த பரிசு
அன்று காலை தன் தாய் ரஜினி டெண்டுல்கரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். அப்போது அவர் விநாயகர் சிலை ஒன்றை பரிசளித்துள்ளார். அதை வாங்கிக் கொண்ட சச்சின் அதை விலை மதிக்க முடியாதது என குறிப்பிட்டுள்ளார். அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவு
சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பதிவில், "என் தாயிடம் ஆசீர்வாதம் வாங்கி நாளைத் தொடங்கினேன். எனக்கு அவர் பரிசு அளித்த கணபதி சிலையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விலைமதிக்க முடியாதது." என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications