Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி வழங்கிய மதிப்புமிக்க பரிசு பொருள்.. வேண்டாம் என திருப்பி கொடுத்த சச்சின்..!! காரணம் என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறும் போது, விராட் கோலி ஒரு பரிசு பொருள் அளித்துள்ளார்.

ஆனால் அதனை சிறிது காலம் வைத்திருந்த சச்சின் பிறகு வேண்டாம் என்று விராட் கோலியிடம் திருப்பி வழங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

அப்படி என்ன கோலி அளித்த பரிசை, சச்சின் திருப்பி அளித்தார். அதற்கான காரணத்தையும் சச்சின் கூறியுள்ளார்.

கோலியின் பரிசு

கோலியின் பரிசு

இந்திய அணிக்காக கடைசியாக ஒரு முறை விளையாடி, பெரும் மன வேதனையுடன் நான் வீரர்கள் உடை மாற்றும் அறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து, நான் ஓய்வு பெற்றதற்காக ஒரு நினைவு பரிசை வழங்கினார். அந்த பரிசை பார்த்ததும், எனக்கு வியப்பாக இருந்தது.

புனித கயிறு

புனித கயிறு

ஆம், அது விராட் கோலிக்கு அவரது மறைந்த தந்தை வழங்கிய புனித கயிறு. அதனை விராட் கோலி தனது தந்தையின் நினைவாக வைத்திருந்தார். அதனை நினைவு பரிசாக எனக்கு வழங்கினார். விராட் கோலியின் இந்த செயலால் எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. எனினும் அவருக்காக அந்த நினைவு பரிசை நான் வாங்கி வைத்து கொண்டேன்.

திருப்பி கொடுத்தேன்

திருப்பி கொடுத்தேன்

பின்னர் சிறிது நாட்கள் கழித்து விராட் கோலியிடம் அந்த நினைவு பரிசை திருப்பி கொடுத்தேன். இது விலை மதிப்புமிக்க பரிசு பொருள். உன் தந்தை உனக்கு வழங்கியது. இது வேறு யாரிடமும் இருக்க கூடாது. உன்னிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். இது உன்னுடைய சொத்து. உன் கடைசி மூச்சு இருக்கும் வரை இது உன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று கூறினேன்.

Recommended Video

Virat Kohli மீது வைக்கப்பட்ட விமர்சனம்.. Rohit Sharma கொடுத்த பதிலடி!
பணம் முக்கியமல்ல

பணம் முக்கியமல்ல

நான் கூறியதை விராட் கோலி புரிந்து கொண்டு அதனை வாங்கி கொண்டார். விராட் கோலியின் இந்த செயல் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இதுவரை கிரிக்கெட் மூலம் எவ்வளவு பணம் சம்பாதித்தேன் என்று எனக்கு தெரியாது. ஏனென்றால், நான் நாட்டுக்காக விளையாடி ரன்களை அடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தேன்.

Story first published: Thursday, February 17, 2022, 19:26 [IST]
Other articles published on Feb 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+