Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாமியோவ்..ஒரே ஒரு செஞ்சுரி சாமியோவ்... ஈடன் கார்டனுக்குப் படையெடுத்த சச்சின் பக்தர்கள்!

கொல்கத்தா: கிரிக்கெட் கடவுள் என்று சச்சினை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட கிரிக்கெட் கடவுள், கொல்கத்தாவில் ஆடும் அவரது கடைசிப் போட்டியைப் பார்க்கக் குவியாமல் இருப்பார்களா.. கொல்கத்தாவே திணறிப் போகும் அளவுக்கு சச்சினின் ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் மட்டுமல்லாமல், நகர் முழுவதுமே சச்சின் சரண கோஷம்தான் களை கட்டியுள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சின் கடைசியாக ஆடும் போட்டியைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர்.

இது ஒரு புனிதப் பயணம்

இது ஒரு புனிதப் பயணம்

சச்சின் ரசிகர்கள் பலருக்கும் இது ஒரு புனிதப் பயணம் போல இருப்பதாக உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கையில் இப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமா...

வாழ்க்கையில் இப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமா...

பலர், இப்படி ஒரு சான்ஸ் வாழ்க்கையில் இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்று நெக்குருகி சொன்னார்கள்.

வீடுகள் தோறும் சச்சின் பேச்சுதான்

வீடுகள் தோறும் சச்சின் பேச்சுதான்

கொல்கத்தாவில் உள்ள மக்கள் அத்தனை பேருமே கிட்டத்தட்ட சச்சின் வெறியர்களாக மாறியுள்ளதைக் காண முடிந்தது. எங்கு பார்த்தாலும் சச்சின் குறித்த பேச்சுதான்.

மைதானத்தில் சச்சின் முழக்கம்

மைதானத்தில் சச்சின் முழக்கம்

அதேபோல ஈடன் கார்டன் மைதானத்திலும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் சச்சின் பெயரை உச்சரித்தவண்ணம் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

இது சச்சின் ஸ்டைலுமா...

இது சச்சின் ஸ்டைலுமா...

பலர் சச்சினைப் போலவே ஹேர்ஸ்டைலை மாற்றி புளகாங்கிதப்பட்டுக் காணப்பட்டனர். பெரும்பாலானவர்கள் சச்சின் படம் பொறித்த டி சர்ட்டுடன் பளிச்சிட்டனர்.

டெண்டுல்கர் சக்கரவர்த்தி

டெண்டுல்கர் சக்கரவர்த்தி

கெளரவ் சக்கரவர்த்தி என்ற ரசிகர், சச்சின் மீதுள்ள பேய்த்தனமான காதலால், தனது பெயரையே கெளரவ் டெண்டுல்கர் சக்கரவர்த்தி என்று மாற்றி விட்டாராம். அவர் கூறுகையில், இது ஒரு புனிதப் பயணம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போட்டி இது. மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் பார்க்கிறோம் என்றார். இவர் போட்டியைப் பார்ப்பதற்காக 5 நாள் லீவு போட்டு வந்துள்ளாராம்.

அஸ்ஸாமிலிருந்தும்

அஸ்ஸாமிலிருந்தும்

அஸ்ஸாமிலிருந்து ஒரு பெரிய குரூப்பே கொல்கத்தா வந்து இறங்கியுள்ளது. சச்சினுக்காகத்தானாம் இந்த தொலை தூரப் பயணம்.

செஞ்சுரி போடுவாரா...

செஞ்சுரி போடுவாரா...

பல ரசிகர்களுக்கு சச்சின் எப்படியும் ஒரு சதத்தை இந்தப் போட்டியில் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிச்சயம் சதமடிப்பார் சச்சின் என்றும் பலர் நம்பிக்கையுடன் கூறினர்.

Story first published: Wednesday, November 6, 2013, 17:36 [IST]
Other articles published on Nov 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+