Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் ரஞ்சியில் ஆடத் தொடங்கியபோது பிறந்தவர் அவருடைய கடைசிப் போட்டியில் ஆடிய சுவாரஸ்யம்!

லாலி, ஹரியானா: சச்சின் தனது ரஞ்சி கிரிக்கெட் வாழ்க்கையைத் தொட்ங்கிய போது பிறந்த தவல் குல்கர்னி, சச்சினின் கடைசி ரஞ்சிப் போட்டியில் சச்சினுடன் விளையாடியது பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.

கடந்த 25 வருடமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் சச்சின். தனது கடைசி ரஞ்சிப் போட்டியை மும்பை அணிக்கு வெற்றியைக் கொடுத்து முடித்திருக்கிறார்.

ஹரியானா மாநிலம் லாலியில் நடந்த இந்த இறுதி ரஞ்சிப் போட்டியில் ஒரு சுவாரஸ்யத்தை ரசிகர்கள் காண முடிந்தது.

அசாதாரண ஜோடி

அசாதாரண ஜோடி

மும்பை அணியில் சச்சினுடன் இணைந்து விளையாடி தவல் குல்கர்னி பலரது பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார். இதற்கான காரணம் சுவாரஸ்யமானது...

சச்சின் காலெடுத்து வைத்தபோது பிறந்தவர்

சச்சின் காலெடுத்து வைத்தபோது பிறந்தவர்

சச்சின் டெண்டுல்கர் 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது முதல் ரஞ்சிப் போட்டியில் விளையாடினார். அதே நாளி பிறந்தவர்தான் இந்த குல்கர்னி.

வெற்றி ரன்னை விரட்டிய குல்கர்னி

வெற்றி ரன்னை விரட்டிய குல்கர்னி

சச்சினின் கடைசிப் போட்டியில் அவருடன் இணைந்து விளையாடிய, சச்சினுடன் இணைந்து 50 ரன்களைச் சேர்த்தார். மேலும் வெற்றிக்கான ரன்னையும் குல்கர்னியே எடுத்தார்.

மிகப் பெரிய சந்தோஷம்...

மிகப் பெரிய சந்தோஷம்...

சச்சினுடன் இணைந்து ஆடியது குறித்து குல்கர்னி கூறுகையில், சச்சின் தனது முதல் ரஞ்சிப் போட்டியை ஆடிய நாளன்று பிறந்த நான் சச்சினின் கடைசிப் போட்டியில் அவருடன் இணைந்து விளையாடியது, அதுவும் அவருடன் இணைந்து களத்தில் நின்ற கடைசி வீரர் என்ற பெருமை கிடைத்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது.

வரலாறு படைத்து விட்டேன்

வரலாறு படைத்து விட்டேன்

இதன் மூலம் நான் வரலாறு படைத்து விட்டேன். எனது கனவும் நனவாகி விட்டது என்றார்.

Story first published: Thursday, October 31, 2013, 11:02 [IST]
Other articles published on Oct 31, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+