Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினின் பலே வடா பாவ்.. திரும்பி வந்த புதிய நண்பர்.. சச்சின் வீடியோ வெளியீடு

மும்பை : சச்சின் டெண்டுல்கர் கடந்த பதிவில் தான் செய்த வடா பாவை தீவிரமாக பார்த்த நண்பரையும் அதாவது பூனையையும் தன்னுடைய புகைப்படத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த பூனை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளதாகவும், தன்னுடைய வடா பாவை அது மிஸ் செய்வதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sachin Tendulkars new friend is back -Missing his Vada pav

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், சமையல் உள்ளிட்ட தனது பல்வேறு திறமைகளை சமூக வலைதளத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் முடங்கியுள்ள முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கடந்த மாதத்தில் மாம்பழ குல்பி செய்து அசத்தினார். அதேபோல கடந்த வாரத்தில் தனக்கு பிடித்தமான உணவான வடா பாவ் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் தான் செய்த வடா பாவை பார்ப்பதற்காக வந்த தன்னுடைய புதிய நண்பரையும் அதாவது பூனையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

Sachin Tendulkars new friend is back -Missing his Vada pav

இந்நிலையில் அந்த புதிய நண்பர் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளதாகவும் தன்னுடைய வடா பாவின் சுவை அதை மீண்டும் அழைத்து வந்துள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவுடன் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். கடந்த 2013ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், சமூக நிகழ்வுகளில் அக்கறை செலுத்தி வருகிறார்.

Story first published: Tuesday, September 15, 2020, 20:41 [IST]
Other articles published on Sep 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+