For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் சச்சினின் இத்தனை சாதனைகளா..? முறியடிக்க யாராவது பொறந்து தான் வரணும்..!!

லண்டன்:உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனைகள் இந்த முறையாவது முறியடிக்கப் படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏன் எனில் அவர் படைத்த சாதனைகள் அப்படி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

உலக கோப்பை தொடர்களில் மறக்க முடியாத ஆட்டங்கள் என்றால் அது சச்சின் ஆடிய ஆட்டங்களை மாஸாக சொல்லலாம். 2011ம் ஆண்டில் தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றெடுத்த போது இந்திய அணி சார்பாக அவர்தான் அதிக ரன்கள் எடுத்திருந்தார்.

யாரும் நம்பமுடியாத அளவுக்கு உலக கோப்பை போட்டிகளில் தமது முத்திரையை ஆழ பதித்திருப்பவர் சச்சின். அவருடைய பல சாதனைகளை இனி யாராலும் முறியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏன் என்றால் மொத்தம் 6 உலக கோப்பை தொடரில் அவர் விளையாடியுள்ளார்.

கேள்வியாக இருக்கிறது

கேள்வியாக இருக்கிறது

ஒரே ஒரு உலக கோப்பை போட்டியில் மட்டுமே அவர் மோசமாக விளையாடி இருக்கிறார். மீதி 5 உலக கோப்பை போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்திருக்கிறார். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள், அவரது சாதனைகளை முறியடிக்க முடியுமா என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

சச்சின் படைத்த சாதனைகள் அப்படி. தெரியாதவர்களுக்கு அவரின் சாதனை பட்டியல் இதோ... தெரிந்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை குறித்து வைத்துக் கொள்ள...!!

500 ரன்கள் 2 முறை

500 ரன்கள் 2 முறை

உலக கோப்பை போட்டியில் இருமுறை 500 ரன்கள் குவித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. உலக கோப்பைப் போட்டிகளில் 2, 278 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். சராசரி 56.96 சதவீதமாகும். மொத்தமாக, உலக கோப்பை தொடரில் 45 ஆட்டங்களில் அவர் விளையாடி இருக்கிறார்.

535 ரன்கள் அதிகம்

535 ரன்கள் அதிகம்

அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் தனக்கு அடுத்த இடத்தில் உள்ள பாண்டிங்கை விடவும் 535 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளார். நடப்பு வீரர்களில் கிறிஸ் கெயில் உலக கோப்பையில் 944 ரன்கள் எடுத்துள்ளார். இவர் அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக அடிக்க வேண்டும். அது சாத்தியம் தானா என்பது தெரிய வில்லை.

152 ரன்கள், 18 பவுண்டரிகள்

152 ரன்கள், 18 பவுண்டரிகள்

நமீபியாவுக்கு எதிராக 151 பந்துகளில் 152 ரன்கள் எடுத்ததே, அவர் உலக கோப்பையில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். 2003ம் ஆண்டு அவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். அந்த போட்டியில் 18 பவுண்டரிகள் அடங்கும்.

 6 சாதனை சதங்கள்

6 சாதனை சதங்கள்

உலக கோப்பையில் சச்சின் அடித்திருப்பது மொத்தம் 6 சதங்கள். 1996ல் கென்யாவுக்கு எதிராக 127, இலங்கைக்கு எதிராக 137 ரன்களை குவித்தார். 1999ல் கென்யாவுக்கு எதிராக 140, நமீபியாவுக்கு எதிராக 152 ரன்கள் எடுத்தார். 2011ல் இங்கிலாந்துக்கு எதிராக 120, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 111 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிக அரைசதங்கள்

அதிக அரைசதங்கள்

உலக கோப்பை தொடரில் அதிக அரை சதங்கள் எடுத்தவர் சச்சின். மொத்தம் 15 அரை சதங்கள். 1992, 1996ம் ஆண்டு தொடர்களில் தலா 3 அரைசதங்கள் அடித்தார். பின்னர் 2003-ல் 6, 2007ல் ஒரு அரைசதம், 2011-ல் 2 அரைசதங்களை எடுத்தார்.

12 அரைசதங்கள்

12 அரைசதங்கள்

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் குமார் சங்கக்காரா. 12 அரை சதங்கள் எடுத்திருக்கிறார். நடப்பு வீரர்களில் எந்தவொரு வீரரும் ஆறு அரை சதத்துக்கு மேல் எடுத்ததில்லை. ஆக இந்த சாதனையையும் முறியடிப்பது கடினம்.

673 ரன்கள் குவிப்பு

673 ரன்கள் குவிப்பு

ஓர் உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற பெருமையும் சச்சினுக்கு உண்டு. 2003ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அவர் 673 ரன்கள் குவித்தார். மொத்தமாக, உலக கோப்பை தொடரில் 45 ஆட்டங்களில் 2, 278 ரன்கள் குவித்திருக்கிறார்.

241 பவுண்டரிகள்

241 பவுண்டரிகள்

45 ஆட்டங்களில் 241 பவுண்டரிகள் அடித்துள்ளார் சச்சின். உலக கோப்பை போட்டிகளில் மொத்தமாக 200 பவுண்டரிகள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் அவர் தான். அடுத்த இடத்தில் 96 பவுண்டரிகளுடன் பாண்டிங். நடப்பு வீரர்களில் 90 பவுண்டரிகள் அடித்த வீரர்கள் கூட யாருமில்லை. சச்சினின் இந்த ச் சாதனை எப்போது முறியடிக்கப்படும் என்பது தெரியாது.

யாராவது இருக்கிறார்களா?

யாராவது இருக்கிறார்களா?

6 உலக கோப்பை தொடர்களில் மொத்தமாக 45 இன்னிங்சில் விளையாடி உள்ளார் சச்சின். அடுத்த இடத்தில் உள்ள பாண்டிங், 42 இன்னிங்சில் விளையாடியுள்ளார். இந்த சாதனையை முறியடிப்பது கடினம் என்றே கூறலாம். ஆக மொத்தம் ஒரே வார்த்தையில் சொன்னால் சச்சின் சாதனை முறியடிக்கப்பட் பல ஆண்டுகள் ஆகும் போல தெரிகிறது.

Story first published: Wednesday, May 29, 2019, 19:14 [IST]
Other articles published on May 29, 2019
English summary
Sachin tendulkars records in world cup cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+