மாஸ்டர் பிளாஸ்டர்னா சும்மாவா…? இப்ப நடக்கிறத 2 மாசத்துக்கு முன்பே சொன்னாரே.. சச்சின் தி கிரேட்
லண்டன்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலக கோப்பை அரையிறுதிக்கு கண்டிப்பாக தகுதி பெறும் என்று 2 மாதங்களுக்கு முன்பே சச்சின் கணித்திருப்பது தற்போது நடந்துள்ளது.
உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் ஏறக்குறைய முற்றும் போடும் நிலைக்கு வந்துவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன என்றே சொல்லலாம்.
வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டியில் 316 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும். இது கற்பனையிலும் நடக்காது என்பதால், கிட்டத்தட்ட பாகிஸ்தானின் வாய்ப்பு முடிந்து விட்டது.

2 மாதத்துக்கு முன்பு
அதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன என்று கூறலாம். உலக கோப்பை தொடங்கும் முன்பே, அதாவது 2 மாதங்களுக்கு முன்பு இப்படி தான் நடக்கும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்தார்.

கேள்விக்கு பதில்
கடந்த மே மாதம் சச்சினிடம் உலக கோப்பை அரையிறுதியில் எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

தகுதிபெறும் அணிகள்
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா 3 அணிகள் கண்டிப்பாக அரையிறுதிக்கு தகுதி பெறும். நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் இந்த இரண்டு அணிகளில் ஒன்று தான் அரையிறுதிக்கு செல்லும் என்றார்.

வைரலான கணிப்பு
அது தான் இப்போது நடந்திருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா 3 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மேலும் நியூஸிலாந்து தகுதி பெற்று உள்ளதால் சச்சினின் கணிப்பு உண்மையாகி இருக்கிறது. இணையத்திலும் வைரலாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications