Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது!! லாஜிக் சொல்லும் சச்சின்!!

Recommended Video

பாகிஸ்தானை வீழ்த்துவதற்கான நேரம் இது: சச்சின்!!- வீடியோ

மும்பை : இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆடாவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு இரண்டு புள்ளிகள் விட்டுக் கொடுத்து உதவியது போல ஆகி விடும் என சச்சின் கூறியுள்ளார்.

மேலும், தனிப்பட்ட முறையில் அதை தான் விரும்பவில்லை எனவும் கூறி இருக்கிறார். இதன் மூலம் உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார்.

ஆடக் கூடாது

ஆடக் கூடாது

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறக் கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.

வீழ்த்துவதற்கான நேரம்

வீழ்த்துவதற்கான நேரம்

இந்நிலையில் சச்சின், "இந்தியா எப்போதும் பாகிஸ்தானை உலகக்கோப்பையில் வென்றுள்ளது. மீண்டும் ஒரு முறை அவர்களை வீழ்த்துவதற்கான நேரம் இது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அந்த தொடரில் இரண்டு புள்ளிகளை விட்டுக் கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை" என்றார்.

கவாஸ்கர் சொன்ன கருத்து

கவாஸ்கர் சொன்ன கருத்து

அதே சமயம், சச்சின் இந்தியா என்ன முடிவெடுத்தாலும் தான் அதை ஆதரிப்பேன். நாடு தான் முதலில் என கூறினார். இதே கருத்தையே முன்னர் கவாஸ்கரும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு என்ன?

முடிவு என்ன?

உலககோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடாமல் இருந்தால் அந்த அணிக்கு சாதகமாகவே அது முடியும் என்பதை பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பிசிசிஐ இந்த விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

Story first published: Friday, February 22, 2019, 18:28 [IST]
Other articles published on Feb 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+