Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எச்சில் பயன்படுத்த தடை... பௌலர்களை எல்லாம் முடக்கி போட்டுருக்கு... சச்சின் ஆதங்கம்

மும்பை : கொரோனா பரவல் காரணமாக பந்தில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை பெளலர்களை முடக்கியுள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சில மாதங்கள் கழித்து சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வரும் சூழலில் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருநாள் போட்டிகளை கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டிகளை அணுகக் கூடாது என்றும் அவை இரண்டும் முற்றிலும் வித்தியாசமானவை என்றும் அவர் மேலும் கூறினார்.

வேகம் எடுத்துள்ள கிரிக்கெட்

வேகம் எடுத்துள்ள கிரிக்கெட்

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச அளவில் கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளும் முடங்கின. இதையடுத்து ஏறக்குறைய 6 மாதங்களுக்கு பிறகு மெதுவாக அவை நடைபெறத் துவங்கியுள்ளன. தற்போது வேகம் எடுத்துள்ளன.

பௌலர்கள் முடக்கம்

பௌலர்கள் முடக்கம்

ஆயினும் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சர்வதேச அளவில் பௌலர்கள் முடங்கியுள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். பந்துகளில் 60 சதவிகிதம் எச்சிலும், 40 சதவிகிதம் வியர்வையும் பயன்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய சச்சின் டெண்டுல்கர், தற்போது இந்த தடையால் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

பும்ரா அதிருப்தி

பும்ரா அதிருப்தி

ரிவர்ஸ் ஸ்விங் முக்கியமாக இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முன்னதாக ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்திருந்த நிலையில், அதே கருத்தை தற்போது சச்சின் டெண்டுல்கரும் குறிப்பிட்டுள்ளார்.

எச்சில் பயன்படுத்த தடை

எச்சில் பயன்படுத்த தடை

எச்சிலுக்கு மாற்று தற்போது வரை இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர், இது பேட்ஸ்மேன்களை ஆப்சைடில் ஆடக்கூடாது, ஆன்சைடில் மட்டுமே ஆட வேண்டும் என்று அறிவுறுத்துவதைப் போன்றது என்றும் கூறியுள்ளார். எச்சிலுக்கு மாற்று இல்லாததால் தான் பௌலர்கள் முடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சச்சின் அறிவுறுத்தல்

சச்சின் அறிவுறுத்தல்

டெஸ்ட் போட்டிகளில் இதற்கு மாற்றை பௌலர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சச்சின் அறிவுறுத்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜன் மட்டுமே சிறப்பாக செயலாற்றியதை சுட்டிக் காட்டியுள்ள சச்சின், ஒருநாள் போட்டிகளில் இருந்து டெஸ்ட் போட்டிகள் முற்றிலும் வித்தியாசமானவை என்றும், அதற்கேற்ப வீரர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 14, 2020, 17:44 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+