Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெண்டு டீம்க்குமே 3வது செஷன் ரொம்ப முக்கியம்... சச்சின் டெண்டுல்கர் ட்வீட்

மும்பை : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள இந்திய அணி நிதானமாக ஆடி 85 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்துள்ளது.

இந்நிலையில் மூன்றாவது செஷன் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நிதானமாக ஆடி 85 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் டிவீட்

சச்சின் டெண்டுல்கர் டிவீட்

இந்நிலையில் இந்த போட்டியில் 3வது செஷன் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போட்டி சமநிலையுடன் காணப்படுவதாகவும் இரு அணிகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு மற்றவரை முந்த முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அறிய சச்சின் ஆவல்

அறிய சச்சின் ஆவல்

மேலும் முதல் நாள் ஆட்ட முடிவில் போட்டியின் நிலை என்னவாக இருக்கும் என்பதை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா தனது முதல் பகலிரவு போட்டியை வங்கதேசத்திற்கு எதிராக கடந்த ஆண்டில் ஆடிய நிலையில் வெளிநாட்டில் விளையாடும் முதல் பகலிரவு போட்டி இது.

8வது வெற்றிக்கு ஆஸி. தீவிரம்

8வது வெற்றிக்கு ஆஸி. தீவிரம்

இதுவரை 7 பகலிரவு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இந்த போட்டியின் வெற்றி மூலம் 8வது வெற்றியை பெற முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல இந்த 2வது பகலிரவு போட்டியை வெற்றி பெற இந்திய அணியும் தீவிரம் காட்டுகிறது.

Story first published: Thursday, December 17, 2020, 23:50 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+