Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அவுட்டா? இல்லையா..? நம்ம சச்சினையே நகம் கடிக்க வைத்த வீடியோ.. இணையத்தில் வைரல்

Recommended Video

Viral Video : அவுட்டா?.. இல்லையா?.. சச்சினையே மிரள வைத்த வீடியோ

மும்பை: கிரிக்கெட்டில் உலகில் இதற்கு முன்பாக இப்படி நடைபெற்றது இல்லை என்று கூறி சச்சின் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

கிரிக்கெட் உலகில் வினோதமான, ஆச்சரியத்தக்க சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதை பல ஆண்டுகாலம் பேசுபவர்களும் உண்டு. அதை போன்றதொரு சம்பவம் தற்போது நிகழ்ந்திருக்கிறது.

அதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் இது போன்றதொரு நிகழ்வு கிரிக்கெட் உலகில் இதற்கு முன்னதாக நடக்க வாய்ப்பில்லை. இனியும் நடக்காது என்ற அடைமொழியுடன் வலம் வரும் ஒரு முக்கிய வீடியோ தான் அது.

பெயில்ஸ் விழவில்லை

பெயில்ஸ் விழவில்லை

இன்னும் சொல்லப்போனால், பந்து ஸ்டெம்ப்பில் பட்டு பெயில்ஸ் கீழே விழாத சம்பவங்களை பார்த்திருக்கலாம். ஆனால், இந்த வீடியோவில் பெயில்ஸ் நகர்ந்து ஸ்டெம்பிங் மேலே உட்கார்ந்து கொள்கிறது என்பது தான் விஷயமே.

அவுட் இல்லை

அவுட் இல்லை

அதாவது, பந்து ஸ்டம்பில் பட்டதும் பெயில்ஸ் கீழே விழுந்தால் ஐசிசி விதிப்படி அது அவுட். பெயில்ஸ் கீழே விழவில்லையெனில் அது அவுட் கிடையாது. ஆனால் இப்படி ஒரு சம்பவம் இப்போது நிகழ்ந்திருக்கிறது.

அம்பயர் தராத அவுட்

அம்பயர் தராத அவுட்

கிளப் போட்டி ஒன்றில், பந்து ஸ்டம்பில் அடித்ததும் பெயில்ஸ் நகர்ந்தது. ஆனால் கீழே விழாமல், ஒரேயொரு ஸ்டம்பின் பேலன்ஸில் நின்றது. பெயில்ஸ் கீழே விழாததால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

சச்சின் கேள்வி

அந்த வீடியோவை தமது நண்பர் பகிர்ந்தார் என்று கூறி, டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். அப்போது மைதானத்தில் நீங்கள் அம்பயராக இருந்தால் என்ன தீர்ப்பு கொடுத்திருப்பீர்கள் என்று ஒரு கேள்வியையும் எழுப்பி இருக்கிறார் சச்சின். அந்த வீடியோ தற்போது வைரலாக படுவேகமாக பரவி வருகிறது.

Story first published: Friday, July 26, 2019, 8:21 [IST]
Other articles published on Jul 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+