இன்ஸ்டாகிராமில் வைரலான சச்சின் புகைப்படம் -லைக்குகளை அள்ளிக்குவித்த ரசிகர்கள்
தாய்லாந்து : தாய்லாந்தில் தன்னுடைய விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அந்தக் கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளது. மேலும் ஏராளமானோர் உற்சாகத்துடன் கமெண்ட்டுகளை அளித்துள்ளனர்.
சமீபத்தில் தன்னுடைய முழங்கை காயம் குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர், தான் கடந்த கடினமான நேரங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட நிலையில், தற்போது உற்சாகமான மனநிலையுடன் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 100 சதம்
கிரிக்கெட்டின் கடவுளாக தன்னுடைய ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய 24 ஆண்டுகால கிரிக்கெட் கேரியரில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கினார்.

கடுமையான வலிகள்
எப்பொழுதும் வெற்றியின் உச்சத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சச்சினுக்கும் கடந்து செல்ல முடியாத வலிகள், காலங்கள் இருந்ததை சமீபத்திய அவரது பேட்டி வெளியுலகிற்கு எடுத்துக் காட்டியது.

மற்றவர் உதவியுடன் வாழ்க்கை
தான் வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது, தனக்கு ஏற்பட்ட முழங்கை காயம் தன்னை எவ்வாறெல்லாம் பாடுபடுத்தியது. ஒவ்வொரு விஷயத்திற்கும் தான் மற்றவர்களின் உதவியை நாட வைத்தது என்பது குறித்து அவர் தெரிவித்திருந்தார்.

கடந்து சென்ற பிரச்சினை
பிசியோதெரபி உள்ளிட்டவற்றால் தீர்க்க முடியாத அந்த பிரச்சினையை அறுவை சிகிச்சை செய்து கடந்து வந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். இனி விளையாட முடியுமா என்ற நினைப்பு தவிடு பொடியானதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்
இந்நிலையில் தற்போது தாய்லாந்தில் தன்னுடைய விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், கடற்கரையில் தான் சிங்கிளாக நிற்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"மனம், ஆன்மாவை தேற்றுகிறது"
கடலலைகளின் இசை அனைவரது மனம் மற்றும் ஆன்மாவை தேற்றுவதாக சச்சின் தன்னுடைய கேப்ஷனில் தெரிவித்துள்ளார். அவரது இந்த கவிதை நடையிலான வாக்கியத்திற்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உடனடியாக லைக்குகளை அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications