Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை செய்தால் நான் வீட்டுக்கு கூட போக முடியாது.. 24 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம்.. சச்சின் பேட்டி

மும்பை : கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை 'மாஸ்டர் பிளாஸ்டர்' என்று ரசிகர்கள் அன்புடன் அழைப்பார்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருயையும் அவரையே சேரும். சச்சின் கிரிக்கெட் மீது எவ்வளவு பற்று வைத்துள்ளார் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில், 24 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக கூறியுள்ளார்.

1998 நடந்த சம்பவம்

1998 நடந்த சம்பவம்

1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 131 பந்துகளில் 143 ரன்களை சச்சின் விளாசினார். அவர் ஆடியதில் சிறந்த இன்னிங்சாக இன்றுவரை அது புகழப்படும்.

இதனை 'ஷார்ஜாவில் பாலைவனப் புயல்' என்று ரசிகர்கள்அழைப்பார்கள்.இந்த நிலையல், அந்த இன்னிங்ஸ் பிறகு நடந்த சம்பவம் ஒன்று குறித்து சச்சின் டெண்டுல்கர் தற்போது வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின் பேசியதாவது, இது 1998 இல் ஷார்ஜாவில் பாலைவனப் புயல் பயணத்திற்குப் பிறகு நடந்தது. நாங்கள் நாடு திரும்பி வந்தோம், அப்போது ஸ்பான்சர்களில் ஒருவர் என்னை வைத்து விளம்பரம் படம் எடுக்க விரும்பினார். அதில் , என்னை நோக்கி பந்துகள் அறக்க உருவத்தில் பறந்த வரும்.நான் அவற்றை ஸ்டேடியத்திற்கு வெளியே அடிப்பது போலவும் கதை சொன்னார்.

காட்சியை மாற்றினேன்

காட்சியை மாற்றினேன்

ஆனால் நான் இந்த விளம்பரத்தை நிராகரித்தேன். நீங்கள் ஸ்கிரிப்டை மாற்ற வேண்டும், ஏனெனில் இது எனது விளையாட்டை அவமதிப்பது போல் உள்ளது. எனது விளையாட்டை நான் வணங்குகிறேன்.இதனால் இந்த காட்சியில் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.அதிர்ஷ்டவசமாக, அவர்கள் ஸ்கிரிப்டை மாற்றினார்கள். இல்லயேனில், அதில் நான் நடித்து இருந்தால், நான் வீட்டிற்குச் செல்லவோ அல்லது எனது பயிற்சியாளரிடம் திரும்பிச் செல்லவோ கூட முடிந்திருக்காது.

ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரசிகர்கள் நெகிழ்ச்சி

இதனை என் பெற்றோரும், பயிற்சியாளரும் எனக்குக் கற்றுக் கொடுத்தது அல்ல. அவர்கள் சரியான மதிப்புகளை புகுத்தினார்கள், நான் அந்த மதிப்புகளுக்கு ஆதரவாக இருக்கிறேன், என்று டெண்டுல்கர் கூறினார். சச்சினின் இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Saturday, December 17, 2022, 21:21 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+