ப்பா எவ்ளோ குளிரு... மகனுடன் என்ஜாய்மெண்ட்... இளம் வயது புகைப்படத்தை வெளியிட்ட சச்சின்
மும்பை : மும்பை குளிரை தன்னுடைய மகனின் இளம் வயதில் அவனுடன் தான் என்ஜாய் செய்த புகைப்படத்தை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் சிறுவனாக காணப்படுகிறார். மேலும் குளிருக்காக ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்துள்ளார்.
மும்பை குளிர்காலத்தின் அப்போதைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை அவர் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போதைய புகைப்படத்திற்காக காத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

கொண்டாடப்படும் சச்சின்
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக இருப்பவர். அவர் தன்னுடைய கேரியரின் போதும் தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இந்த லாக் டவுனில் அவர் சமூக வலைதளங்களில் அதிகமாக செயல்பட்டு வருகிறார். தற்போதும் இது தொடர்கிறது.

மகனுடன் சச்சின்
இந்நிலையில் குளிர்காலத்தில் மும்பை அப்போது எப்படி இருந்தது என்பது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய மகன் அர்ஜூனுடன் அவர் நெருப்புமூட்டி இளம் வயதில் மும்பையின் குளிரை என்ஜாய் செய்தவாறு உள்ளார். இந்த புகைப்படம் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே 8,00,000 பேர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

ரசிகர்கள் கமெண்ட்
தொடர்ந்து அவர் அப்போதைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போதைய புகைப்படத்திற்காக காத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். விரைவில் அவர் அடுத்த புகைப்படத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியில் அர்ஜூன்
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான மும்பை அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இணைந்துள்ளார். முன்னதாக அன்டர் 19 அணியில் இணைந்து விளையாடியுள்ள அவர் முதல் முறையாக சீனியர் வீரர்களுடன இணைந்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications