For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'நச்' ஆட்டத்தைக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற வேண்டும் சச்சின்- கங்குலி

கொல்கத்தா: நல்ல புகழில் இருக்கும்போதே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும். சச்சின் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. அவர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் முழுமையாக ஓய்வு பெறுவது தவிர்க்க முடியாதது. அது நெருங்கி விட்டது. தனது சிறப்பான ஆட்டத்தின்போதே அவர் ஓய்வு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Sachin tendulkar and Ganguly

அவரது ஓய்வு குறித்து அதிகஅளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன. இது அவருக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது. அதேசமயம், அவர் ஓய்வு பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நான் உணர்கிறேன். விரைவில் அவர் ஓய்வை அறிவிக்கலாம்.

அருமையான ஆட்டம் ஒன்றைக் கொடுத்து விட்டு உயர்ந்த தலையுடன் அவர் ஓய்வு பெற வேண்டும்.

இன்னும் சிறிது காலம் அவர் விளையாடினாலும் கூட அவரது சாதனைகள் குறைந்து போய் விடப் போவதில்லை. ஆனால், நல்ல நிலையில் இருக்கும்போது ஓய்வு பெறுவதுதான் நல்லது என்றார் கங்குலி.

-

Story first published: Tuesday, October 8, 2013, 13:57 [IST]
Other articles published on Oct 8, 2013
English summary
Observing that Sachin Tendulkar's retirement from international cricket was "imminent", former India captain Sourav Ganguly hopes the batting legend quits only after playing a match wining knock. "There is too much speculation about his retirement, which is putting pressure on him. While I believe his retirement is not very far, I hope he bids adieu with his bat held high. He should leave the game only after playing a match wining knock," said Ganguly.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+