போற போக்க பார்த்தா... கிரிக்கெட்ட விட்டுட்டு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு
மும்பை : கொரோனா வைரசால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது கிரிக்கெட் வீரர்களின் பல்வேறு திறமைகளை குறிப்பாக சமையல் திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளது.
Recommended Video
தன்னுடைய 25வது திருமண நாளை கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருக்கு ஒரு ஸ்பெஷல் டிரீட் கொடுத்து அசத்தியுள்ளார்.
புதுமையான வகையில் மாம்பழ குல்பி செய்து அசத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். மாம்பழத்தை கலவையில் சேர்க்காமல், மாம்பழத்திற்குள் குல்பி கலவையை வைத்து அவர் செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சமையலில் கலக்கும் வீரர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து வீட்டிற்குள் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள், தங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சமையல் அவர்களுக்கு சிறப்பாக கைகொடுக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என பாகுபாடின்றி சமையலில் புகுந்து கலக்கி வருகின்றனர்.

குடும்பத்தினருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்
இந்நிலையில் தன்னுடைய 25வது திருமண நாளை நேற்று கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய குடும்பத்தினருக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் சச்சின் டெண்டுல்கர், அவ்வப்போது பல வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துவருகிறார்.

சமையல் வீடியோ பகிர்வு
இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஒரு தேர்ந்த சமையல் கலைஞராகவே மாறி, மாம்பழ குல்பி ஐஸ்கிரீம் செய்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அதன் செய்முறையையும் கூறி, இறுதியில் சாப்பிட்டு பார்த்து அதன் சுவை குறித்தும் நமக்கு கூறுகிறார். நமக்கு இங்கிருந்தே வாயில் எச்சில் ஊறுகிறது.

பல்வேறு விஷயங்களில் அசத்தல்
இந்த லாக்டவுன் சமயத்தில் பல்வேறு விஷயங்களை தன்னுடைய கைப்பட செய்கிறார் சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில் தன்னுடைய மகளின் உதவியுடன் மகன் அர்ஜூனுக்கு முடிவெட்டி விட்டு ரசிகர்களை கொள்ளை கொண்டார். அந்த செயலும் தேர்ந்த பார்பரை நினைவு படுத்தியது. இந்நிலையில் தற்போது தேர்ந்த சமையல்காரராக மாறியுள்ளார் சச்சின்.


Click it and Unblock the Notifications