எல்லாரோட ஒரே பிரச்சினையா இருந்த மழை... சச்சின் டெண்டுல்கர் புகைப்படம் வெளியீடு
மும்பை : முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
மழையில் நனையும்படியான அந்த புகைப்படத்திற்கு ஒரு காலத்தில் அனைவரது பிரச்சினையாகவும் மழை மட்டுமே இருந்தது என்று அவர் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் சச்சின் டெண்டுல்கர் மழையை மிகவும் என்ஜாய் செய்தபடி காணப்படுகிறார்.
24 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 51 சதங்களையும் 68 அரை சதங்களையும் அடித்துள்ளார். கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர், சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மழையில் நனைந்தபடி உள்ள புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சச்சின். மழையில் நனைந்தபடி அவர் என்ஜாய் செய்து கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் ஒரு காலத்தில் அனைவரது கவலையாகவும் மழை மட்டுமே இருந்தது என்னும்படியாக கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications