Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. மகள் கைவண்ணத்தில் சுவையான பீட்ரூட் கபாப்.. 60 விநாடிகளில் ஸ்வாஹா செய்த சச்சின்!

மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், சச்சினின் மகள் சாரா அவருக்கு பீட்ரூட் கபாப் மற்றும் சாலட் போன்றவற்றை செய்து கொடுத்து அசத்தி வருகிறார். பீட்ரூட் கபாபின் புகைப்படங்களை பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், அதை 60 வினாடிகளில் காலி செய்ததாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து சச்சின் பிரதமர் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் நிதிக்கு 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். மேலும் மாதத்திற்கு 5,000 பேருக்கு உணவளிக்கவும் அவர் உறுதி கொண்டுள்ளார்.

கொரோனாவால் வீட்டிற்குள் முடக்கம்

கொரோனாவால் வீட்டிற்குள் முடக்கம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார். இவரது பல்வேறு சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மற்ற வீரர்களை போல இவரும் வீட்டிற்கள்ளேயே முடங்கி கிடக்கிறார். தன்னடைய குடும்பத்தனருடன் பொழுதை கழித்து வருகறார்.

ரூ.50 கோடி நிதியுதவி

ரூ.50 கோடி நிதியுதவி

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரதமர் மற்றம் மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 25 கோடி ரூபாயை சச்சின் வழங்கியுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5,000 பேருக்கு மாதந்தோறம் உணவளிக்கவும் அவர் உறுதி பூண்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட்டில் மட்டுமின்றி நன்கொடை அளிப்பதிலும் தான் சிறந்தவர் தான் என்பதை நிரூபித்துள்ளார் சச்சின்.

குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு

குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர், தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பான வகையில் பொழுதை போக்கிவருகிறார். அவருக்கு மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா மிகச்சிறந்த வகையில் ஈடு கொடுக்கிறார்கள். இந்நிலையில் சச்சின் தனது மகள் சாரா செய்துகொடுத்த பீட்ரூட் கபாபை ஒரு வெட்டு வெட்டியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் பெருமிதம்

சச்சின் டெண்டுல்கர் பெருமிதம்

தன்னுடைய மகள் செய்து கொடுத்த பீட்ரூட் கபாபின் ருசியில் மயங்கி தான் அதை 60 வினாடிகளில் காலி செய்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதேபோல சாரா செய்து கொடுத்த தபூலே சாலட்டையும் அவர் வெளுத்து வாங்கியுள்ளார். பாதி தட்டுடன் கூடிய அந்த புகைப்படத்தையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Story first published: Thursday, May 7, 2020, 20:33 [IST]
Other articles published on May 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+