Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உயிரை காப்பற்றிய போக்குவரத்து போலீசாருக்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி.. என்ன நடந்தது?

மும்பை: விராட் கோலி, கங்குலி விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் சச்சின் இதுவரை வாய் திறக்கவில்லை. இதனால் சச்சினுக்கு என்ன ஆனது , இல்லை மௌனத்திற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் யோசித்தனர்.

அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடம் போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்து டிவிட் ஒன்று வந்ததை கண்டு ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்

விபத்து

விபத்து

அப்போது தான் தெரிந்தது சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய தோழி ஒருவருக்கு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது என்று.. விபத்தில் காயமடைந்த தனது தோழியை அங்கிருந்த போக்குவரத்து காவலர் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

போலீசார் உதவி

போலீசார் உதவி

விபத்தில், அவரது முதுகு எலும்பு பாதிக்கப்பட்டதை உணர்ந்த அந்த போக்குவரத்து போலீசார், அதற்கு முதலுதவி அளித்து, அவரை ஆடாமல், அசையாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் காப்பாற்றப்பட்டார்.

சச்சின் நன்றி

சச்சின் நன்றி

இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சச்சின், தக்க நேரத்தில் உதவிய அந்த போக்குவரத்து காவலரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார். இது போன்ற அழகான மனிதர்களால் தான் உலகம் நிறைந்துள்ளதாக குறிப்பிட்ட சச்சின், அவர்களது அயராத பணிக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

விதிகளை மதியுங்கள்

விதிகளை மதியுங்கள்

நாடு முழுவதும் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள சச்சின், மக்கள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த சிலர் போக்குவரத்து விதிகளை மீறி குறுக்கு வழியில் சென்று விபத்தில் சிக்குவதாக குறிப்பிட்டுள்ள சச்சின், உயிரை விட பணமும், நேரமும் பெரியது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, December 17, 2021, 21:46 [IST]
Other articles published on Dec 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+