வயது 49.. ஸ்ட்ரைக் ரேட் 200 .. அதிரடி ஷாட்களால் சச்சின் அசத்தல்.. பேசாமல் இந்திய அணிக்கு வந்திருங்க
டேஹராடுன் : Road safety world series டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 20 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட் உலகில் யாரமே தொட முடியாத சாதனைக்கு சொந்தக்காரரான சச்சின், 49 வயதாகியும் கூட தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தீராத காதல்
கிரிக்கெட் மீது தீராத காதல், அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் மட்டுமே இப்படி வயதானால் கூட, சுலபமாக விளையாட முடியும். பிறக்கும் போதே திறமையுடன் பிறக்கும் நபர்கள் ஒரு ரகம், பிறந்து, தொடர்ந்து பயிற்சி மூலம் ஒரு திறமையை வளர்த்து கொள்ளும் நபர் ஒரு ரகம். ஆனால் சச்சின் திறமையுடன் பிறந்து, தொடர்ந்து பயிற்சி செய்து இன்று யாரும் தொட முடியாத இடத்தில் இருக்கிறார்.
தீவிர பயிற்சி
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறேன் என்று ஒப்பந்தமானவுடன் சச்சின், தன்னுடைய பழைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு சென்று விட்டார். செய்வதை சிறப்பாக செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்த விசயத்தை தொடவே கூடாது என்பார்களே, அதே போல் தான் சச்சின், இந்த தொடருக்காக தனது உடலை சச்சின் ஃபிட் ஆக்கினார்.
அதிரடி பேட்டிங்
அதன் பிறகு, தனது தீவிர பயிற்சியை தொடங்கிய சச்சின், தினமும் பல மணி நேரம் வலைப் பயிற்சியில் நேரத்தை செலவிட்டார். இதன் விளைவாக, சாலை பாதுகாப்பு தொடரில் 16 , 19, 40 ரன்கள் என அதிரடியை காட்டுகிறார். அதுவும் நேற்றைய ஆட்டத்தில் சச்சின் அடித்த ஷாட் ஒவ்வொன்றும் வேற ரகம். படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து அபாஸ் சொல்வாரே, உங்களுக்கு வயசே ஆகலனு.
ரசிகர்கள் பாராட்டு
அதை தான் நேற்று ரசிகர்களும் கூறினர். இன்னும் சிலர் பேசாமல் சச்சினை டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்காக அழைத்து செல்லுங்கள். குறைந்தது ஒவ்வொரு போட்டியிலும் அரைசதமாக விளாசுவார் என்று புகழ்ந்து தள்ளினர். நேற்றைய ஆட்டத்தில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளை சச்சின் விளாசினார். இது அவரை விட வயது குறைவான நமன் ஓஜாவை விட அதிகமான ரன்களாகும்.


Click it and Unblock the Notifications