Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரர்... சச்சின் டெண்டுல்கர்

மெல்போர்ன்: 21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வாகியுள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இணையதளம் நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் சச்சின் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் இணையதளமாகும் இது.

Sachin Tendulkar voted as the best Test player of 21st century

மற்ற வீரர்களை விட சச்சினுக்கே அதிக வாக்குகள் கிடைத்து அவர் முதலிடத்தைப் பிடித்தார். இலங்கையின் சங்கக்கரா 2வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறைஸ்ட் 3வது இடத்தையும் பிடித்தனர்.

முன்னதாக 2000மாவது ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 100 வீரர்களின் பட்டியலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த 100 பேரில் சிறந்தவராக சச்சின் உருவெடுத்துள்ளார்.

Sachin Tendulkar voted as the best Test player of 21st century

மொக்கம் 16,000 பேர் இதில் கலந்து கொண்டு வாக்களித்தனர். அதில் 23 சதவீத வாக்குகளை சச்சின் பெற்று முதலிடம் பெற்றார்.

சங்கக்கராவுக்கு 14 சதவீத ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அதிரடியான வீரர் சங்கக்கரா என்பது குறிப்பிடத்தக்கது. கில்கிறைஸ்ட்டுக்கு 13 சதவீத ஆதரவு கிடைத்தது.

ரிக்கி பான்டிங் 11, கல்லிஸ் 11, ஏப் டிவில்லியர்ஸ் 10 சதவீத வாக்குகளைப் பெற்றனர். ஷான் வார்னேவுக்கு 9 சதவீத ஆதரவு கிடைத்தது.

Sachin Tendulkar voted as the best Test player of 21st century

கிளன் மெக்கிராத்துக்கு 5 சதவீத ஆதரவும், முத்தையா முரளீதரனுக்கு 3 சதவீத ஆதரவும் கிடைத்தன. டேல் ஸ்டெயினுக்கு 1 சதவீத ஆதரவு மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சச்சினின் புகழ் இன்னும் மங்காமல் உள்ளதையே இது காட்டுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

டாப் 10 வீரர்களில் சச்சின் மட்டுமே இந்தியர் ஆவார். இந்தப் பட்டியலில் 4 பேர் ஆஸ்திரேலியர்கள் ஆவர். 3 பேர் தென் ஆப்பிரிக்க வீரர்கள். 2 பேர் இலங்கை வீரர்கள்.

Sachin Tendulkar voted as the best Test player of 21st century

சச்சின் கடந்த 2013ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். இது ஒரு சாதனையாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சச்சின். இவர் ஒருவர்தான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 100 சதங்களைக் கடந்த ஒரே வீரர் ஆவார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஐக்கான் வீரராக சச்சின் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 23, 2015, 13:29 [IST]
Other articles published on Jun 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+