Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிகெட்டுக்கும் நட்புக்கும் ஒற்றுமை உண்டு.. நண்பர்கள் தினத்திற்கு வாழ்த்து கூறிய முன்னாள் வீரர்

மும்பை : நண்பர்கள் தினத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் கடவுளாக போற்றப்படும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் கிரிக்கெட்டையும் நட்பையும் ஒப்புமை செய்து கேப்ஷன் வெளியிட்டுள்ளார். தனது சிறுவயது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, சிஎஸ்கேவும் நண்பர்கள் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்டுள்ளது.

சச்சின் வாழ்த்து

சச்சின் வாழ்த்து

நண்பர்கள் தினத்தையொட்டி கிரிக்கெட் கடவுளாக போற்றப்படும் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், தனது டிவிட்டர் பதிவின் மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் தன்னுடைய சிறுவயது புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவருடன் அவருடைய சிறுவயது நண்பர்கள் காணப்படுகின்றனர்.

சச்சின் ஒப்புமை

சச்சின் ஒப்புமை

அந்த புகைப்படத்தில் சச்சின் பதிவிட்டுள்ள கேப்ஷனில், கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ப்ளட் லைட்களை போன்றது நட்பு என தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு நம்முடைய சாதனைகளை அவை பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் சூரிய ஒளி உன்னைவிட்டு செல்வதாக உணரும் தருணத்தில் தன்னுடைய ஒளியால் உனக்கு ஒளிகொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சிஎஸ்கே வீடியோ வெளியீடு

சிஎஸ்கே வீடியோ வெளியீடு

மேலும் தன்னை பொருத்தவரை அனைத்து நாளும் நண்பர்கள் தினம்தான் என்றும் அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ்சும் நண்பர்கள் தினத்தையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தோனி, ரெய்னாவை முதன்மைபடுத்தியுள்ளது.

ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில்

ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில்

இதனிடையே, நண்பர்கள் தினத்தையொட்டி, துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டிவிட்டர் மூலம் இன்று தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுகுறித்து நேற்று அவர் இட்ட பதிவில். நண்பர்கள் தினத்தை ஒன்றாக கொண்டாடலாம், கேள்வி கேளுங்க என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Story first published: Sunday, August 2, 2020, 15:36 [IST]
Other articles published on Aug 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+