Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்

மும்பை : கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

கிறிஸ்துமசையொட்டி சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சாண்டா கிளாஸ் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்துடன் தான் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானேவும் தன்னுடைய ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் கொண்டாட்டம்

உலகெங்கிலும் கொண்டாட்டம்

இயேசு பிறப்பை கொண்டாடும்வகையில் உலகெங்கிலும் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி தேவாலயங்களில் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டுள்ளன.

சாண்டா கிளாசுடன் புகைப்படம்

சாண்டா கிளாசுடன் புகைப்படம்

கிறிஸ்துமசையொட்டி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் சாண்டா கிளாஸ் மற்றும் கிறிஸ்துமஸ் மரத்துடன் தான் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் கடவுள் வாழ்த்து

ரசிகர்களின் கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் கோலோச்சியவர். அவர் கிறிஸ்துமசை கொண்டாடும் தன்னுடைய ரசிகர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பரவட்டும் என வாழ்த்தியுள்ளார்.

உலகத்தவர் அனைவருக்கும் வாழ்த்து

இந்நிலையில் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லமும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள மெக்கெல்லம் உலக மக்கள் அனைவருக்கும் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொப்பியுடன் வாழ்த்திய டெஸ்ட் துணை கேப்டன்

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் அனைவருக்கும் வாழ்த்துக்களை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் தன்னுடைய தலையில் கிறிஸ்துமஸ் தொப்பியை அணிந்து வாழ்த்துக் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்த்து

இதேபோல இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி கீரன் பொல்லார்டு உள்ளிட்ட வீரர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தன்னுடைய பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளது.

Story first published: Wednesday, December 25, 2019, 13:55 [IST]
Other articles published on Dec 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+