Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 ஆண்டுகள் ஓடிவிட்டது ஆண்டர்சன்.. இது குடும்பத்திற்கான நேரம்.. சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற ஆண்டர்சனுக்கு, இரு அணி வீரர்களும் இணைந்து கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையை அளித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இதன் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 371 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

james anderson eng vs wi Sachin Tendulkar

இதனால் இங்கிலாந்து அணி 251 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. தனது கடைசி போட்டியில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

21 வயதில் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கிய ஆண்டர்சனின் பயணம், 22 ஆண்டுகள் நிற்காமல் பயணித்திருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் 22 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருப்பது பலருக்கும் ஊக்கத்தை அளித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்ற போது இரு அணி வீரர்களும் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை அளித்தனர்.

அதேபோல் ஆண்டர்சன் ஓய்வுபெற்ற போதும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையை அளித்தனர். இதனால் ஆண்டர்சன் கண் கலங்கி நெகிழ்ச்சியடைந்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஆண்டர்சனுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ஹே ஜிம்மி.. 22 ஆண்டுகளாக தொடர்ந்த உங்களின் ஸ்பெல் மூலமாக ரசிகர்களைன் மனங்களை தொடர்ந்து வீழ்த்தியிருக்கிறீர். நீங்கள் பவுலிங் செய்வதை பார்ப்பதே மகிழ்ச்சியை அளிக்கும். அந்த ஆக்‌ஷன், வேகம், ஸ்விங், ஃபிட்னஸ், துல்லியம் ஆகியவற்றின் மூலமாக வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமாக இருக்கிறீர்கள்.

james anderson eng vs wi Sachin Tendulkar

நல்ல உடல்நலத்துடன் இரண்டாவது இன்னிங்ஸ் அமைய வாழ்த்துகிறேன். வாழ்வின் மிகமுக்கிய ஸ்பெல்லுக்காக ஷூக்களை தயார் செய்து கொள்ளுங்கள்.. இம்முறை குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு பின் ஆண்டர்சன் பேசுகையில், வாழ்க்கையில் நான் விக்கெட் வீழ்த்திய வீரர்கள் மறக்க முடியாதவர் சச்சின் டெண்டுல்கர் தான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 12, 2024, 19:57 [IST]
Other articles published on Jul 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+