Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி பிறந்தநாளுக்கு சச்சின் சொன்ன “கூட்டணி” வாழ்த்து.. செம வைரல்!

மும்பை : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலியின் 48வது பிறந்தநாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து கூறி உள்ளார்.

கங்குலி இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்தவர். தோனி, விராட் கோலி போன்றோர் வந்தாலும் கூட கங்குலி தான் சிறந்த கேப்டன் என கூறுவோர் உண்டு.

அவர் தான் இந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தினார். புத்துணர்ச்சி ஊட்டினார். இன்றைய இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய ஆதாரம் அவர்தான்.

சச்சினும், கங்குலியும்

சச்சினும், கங்குலியும்

கங்குலி சச்சினின் கேப்டன்சியில் ஆடி இருக்கிறார். அதன் பின் கங்குலியின் கேப்டன்சியில் சச்சின் பல ஆண்டுகள் ஆடி இருக்கிறார். எந்த காலத்திலும் இருவருக்குள்ளும் எந்த கருத்து வேறுபாடும் வந்ததில்லை. சச்சின் - கங்குலி இடையே நல்ல புரிதல் இருந்தது.

துவக்க வீரர்கள்

துவக்க வீரர்கள்

இருவரும் களத்தில் துவக்க வீரர்களாக பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த துவக்க ஜோடியாக சச்சின் - கங்குலி ஜோடியே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் இடையே இருந்த புரிதல் தான்.

நட்பு

நட்பு

சச்சின் - கங்குலி நட்பு கிரிக்கெட் களத்தில் இந்திய அணியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. இருவரும் ஓய்வு பெற்று விட்டாலும் களத்துக்கு வெளியேயும் அவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், சச்சின் அது குறித்து கங்குலிக்கு கூறிய பிறந்த நாள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் வாழ்த்து

சச்சின் வாழ்த்து

சச்சின் டெண்டுல்கர் கங்குலிக்கு கூறிய பிறந்த நாள் வாழ்த்து - பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாதா. களத்துக்கு வெளியே நம் கூட்டணி, களத்துக்கு உள்ளே இருக்கும் கூட்டணியை போல பலமாக இருக்கும் என நம்புகிறேன். சிறப்பான வருடம் அமைய வாழ்த்துக்கள்.

வைரல் பதிவு

வைரல் பதிவு

சச்சினின் பிறந்த நாள் வாழ்த்து ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ட்விட்டரில் சச்சின் வெளியிட்டுள்ள அந்த பதிவை ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தான் சிறந்த ஜோடி என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Wednesday, July 8, 2020, 20:55 [IST]
Other articles published on Jul 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+