For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா.. "கமலஹாசனை வாழ்த்திய ரஜினிகாந்த்"!

மும்பை: சில வீரர்களை எப்போதுமே மறக்க முடியாது.. மேலும் பிற நாடு என்று பார்க்காமல் மனதாரவும் நேசிப்போம். அப்படிப்பட்ட அரிதிலும் அரிதான வீரர்களில் ஒருவர்தான் பிரையன் லாரா. அவருக்கு நேற்று பிறந்த நாள். இந்த "கரீபிய கிரிக்கெட் கடவுளுக்கு" இந்திய கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் சூப்பராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு கிடைத்த அருமையான கிரிக்கெட் வீரர்களில் லாராவும் ஒருவர். அதிரடி பேட்ஸ்மேன். எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பிய ஒரு அருமையான பிளேயர். அவருக்கு நேற்று பிறந்த நாள்.

லாராவுடன் சமகாலத்தில் ஆடிய இன்னொரு சூப்பர் வீரர் நம்ம நாட்டு சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில்தான் சச்சின் பிறந்த நாள் கொண்டாடினார். இந்த நிலையில் நேற்று வந்த லாராவின் பிறந்த நாளையொட்டி சூப்பராக வாழ்த்து தெரிவித்திருந்தார் சச்சின்.

டிப்ஸ் மட்டும்தான் தருவார்.. நல்லா தூண்டுவார்.. அவர்தாங்க தோனி.. சிலிர்க்கும் ரிஷப் பந்த்டிப்ஸ் மட்டும்தான் தருவார்.. நல்லா தூண்டுவார்.. அவர்தாங்க தோனி.. சிலிர்க்கும் ரிஷப் பந்த்

வாழ்த்திய சச்சின் டெண்டுல்கர்

வாழ்த்திய சச்சின் டெண்டுல்கர்

இதுதொடர்பாக சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில், "ரிஷப ராசிக்காரரே... பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சமீபத்தில் உங்களுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி தருகிறது. அருமையான ஆட்டம் இளவரசரே! விரைவில் மீண்டும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். உடம்பைப் பார்த்துக்கங்க" என்று வாழ்த்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

மீண்டும் இணைந்தனர்

மீண்டும் இணைந்தனர்

சமீபத்தில் ரோட்சேப்டி உலக சீரிஸ் விளையாட்டு இந்தியாவில் நடந்தது. அதில் கலந்து கொண்டு லாரா, சச்சின் ஆகியோரும் விளையாடினர். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா

ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கொரோனா காரணமாக இது பாதிக்கப்பட்டது. வருடம் தோறும் இந்த டுவென்டி 20 தொடரை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

லாரா பிறந்த நாள்

லாரா பிறந்த நாள்

ஏப்ரல் 24ம் தேதி சச்சின் தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார். நேற்று லாரா 51வது பிறந்த நாளை கொண்டாடினார். இருவரும் பேட்டிங்கில் பல சாதனைகளைப் படைத்தவர்கள் ஆவர். சச்சின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 34,000 ரன்களைக் குவித்துள்ளார். 100 சதங்களையும் எடுத்துள்ளார். 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

லாரா செய்த சாதனை

லாரா செய்த சாதனை

இடது கை ஆட்டக்காரரான பிரையன் லாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதம், 48 அரை சதங்களுடன் 11,953 ரன்களைக் குவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 299 போட்டிகளில் ஆடி 10,000 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 19 சதங்களும்

அடங்கும். 17 வருட காலம் கிரிக்கெட் ஆடியவர் பிரையன் லாரா. லாராவும், சச்சினும் ஆடிய காலத்தில் யார் சிறந்த வீரர் என்ற வாதம் போட்டிக்குப் போட்டி தொடர்ந்து கொண்டே இருந்தது. இன்று வரை அதற்கு விடையே இல்லை.

பிரையன் லாரா கமல்ஹாசன் என்றால் சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்த் போல..

இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவரும் உசந்தவர்கள்.

Story first published: Sunday, May 3, 2020, 12:25 [IST]
Other articles published on May 3, 2020
English summary
Sachin Tendulkar has wished former WI player Brian Lara for his birth day
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X