Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் ஏமாற்றினார்.. அடம்பிடிக்கும் பாகிஸ்தான் வீரர்.. முடிவுக்கு வராத 2011 உலகக் கோப்பை சர்ச்சை

இஸ்லாமாபாத்: 2011ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சின் கேட்ட டிஆர்எஸ் ரிவ்யூ ஒன்று தற்போது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. சயீத் அஜ்மல் சச்சினை எடுத்த அந்த விக்கெட்டிற்கு முதலில் நடுவர் அவுட் கொடுத்து இருந்தார்.

ஆனால் ஐசிசி நடைமுறைப்படுத்திய டிஆர்எஸ் முறையின் மூலம் சச்சின் ரிவ்யூ கேட்டதால் அவுட் இல்லை என்று கூறப்பட்டது. அந்த சம்பவம் அப்போது பெரிய சர்ச்சையாக மாறியது.

தற்போது அதுகுறித்து சயீத் அஜ்மல் மீண்டும் பேசியுள்ளார். அதில் சச்சின் விக்கெட் என தெரிந்தும் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான்

2011ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மொஹாலியில் நடைபெற்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய அந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 11வது ஓவர் போட வந்த சயித் அஜ்மலின் பந்தில் சச்சின் அவுட் ஆனார். அவர் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட் ஆனதாக அம்பயர் கூறினார். இந்திய அணியின் இரண்டாவது விக்கெட்டும் விழுந்த காரணத்தால் பாகிஸ்தான் கொண்டாட்டத்தில் இருந்தது.

ரிவ்யூ

ரிவ்யூ

அந்த உலகக் கோப்பை போட்டிக்கு சில நாட்களுக்கு முன்புதான் டிஆர்எஸ் முறை நடைமுறைக்கு வந்தது. அதை பயன்படுத்தி சச்சின் ரிவ்யூ கேட்டு இருந்தார். இதையடுத்து மூன்றாவது நடுவர்கள் சோதனை செய்து பார்த்துவிட்டு சச்சினின் விக்கெட்டை திரும்ப பெற்றனர். 23 ரன்களில் அவுட் ஆகி வேண்டிய சச்சின் பின் அதிரடியாக 85 ரன்கள் எடுத்தார்.

சர்ச்சையான எல்.பி.டபிள்யூ

சர்ச்சையான எல்.பி.டபிள்யூ

இந்த நிலையில் நிறைய கிரிக்கெட் விமர்சகர்கள் அது உண்மையிலேயே எல்.பி.டபிள்யூ விக்கெட்தான், டிஆர்எஸ் முறையில் எதோ குளறுபடி நடந்து இருக்கிறது என்று கூறினார்கள். இந்த சம்பவத்தை வைத்து பாகிஸ்தான் ஊடகங்களும் நிறைய சர்ச்சைக்களை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா அந்த போட்டியில் சூதாட்டம் செய்து நடுவர்களை விலைக்கு வாங்கிவிட்டது என்றெல்லாம் கூட மிகவும் மோசமாக குற்றம்ச்சாட்டியது.

மீண்டும் பிரச்சனை

அதன்பின் கடந்த சில வருடங்களாக அந்த பிரச்சனை பற்றி யாரும் பேசாமல் இருந்தனர். தற்போது பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் சயீத் அஜ்மல் மீண்டும் அதுகுறித்து பேசியுள்ளார். அதில் "நான் நன்றாக பார்த்தேன் பந்து அவர் முட்டியில் படும் போது சரியாக அவர் ஸ்டம்புக்களுக்கு எதிராக நின்று கொண்டு இருந்தார். ஆனால் டிஆர்எஸ் முறையில் எப்படி விக்கெட் இல்லை என்று கூறினார்கள் என்று தெரியவில்லை. அவர் அவுட் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும்'' என்று கூறினார்.

Story first published: Friday, December 1, 2017, 10:13 [IST]
Other articles published on Dec 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+