Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளே ஆஃப் நேரத்தில்.. சிஎஸ்கே-வின் முக்கிய வீரர் "திடீர்" விலகல் - அவசர ஆலோசனை நடத்தும் தோனி

அமீரகம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து மிக முக்கியமான வீரர் விலகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப்-க்கு முன்னேறியது.

கடந்த 2020 சீசனில், 7வது இடம் பிடித்து தொடரை விட்டு வெளியேறிய சென்னை, இம்முறை மாஸ் கம்பேக் கொடுத்து வியக்க வைத்தது.

 9 வெற்றிகள்

9 வெற்றிகள்

ஐபிஎல் 2021 தொடரில் முதல் பாதியிலும் சரி.. இப்போது அமீரகத்தில் நடந்து வரும் இரண்டாம் பாதியிலும் சரி.. சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்திய இரண்டு அணிகளில் சென்னையும் ஒன்று. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி, 4 தோல்வி மற்றும் 9 வெற்றிகளுடன், 18 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் +0.739. மற்ற எல்லா அணிகளையும் விட அதிக ரன் ரேட் வைத்திருக்கும் அணி சென்னை தான்.

 சொதப்பும் தல, சின்ன தல

சொதப்பும் தல, சின்ன தல

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ், ஜடேஜா ஆகிய மூவர் தான் மேட்ச் வின்னர்களாக இருக்கின்றனர். மொயீன் அலி, அம்பதி ராயுடு ஓரே ரகத்தில் இருக்கின்றனர். ஆனால், தோனி, ரெய்னாவின் நிலை...? அதாவது தல.. குட்டித் தல-யின் நிலைமை தான் அந்த அணியின் பெரிய மைனஸ். பவுலிங்கில் ஒரேயொரு போட்டியில் தீபக் சாஹரையும், பிராவோவையும் உட்கார வைக்க, சிஎஸ்கே நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை, 2 ஓவர் மீதம் வைத்து துவம்சம் செய்து வென்றது.

 அதிர்ச்சி அறிக்கை

அதிர்ச்சி அறிக்கை

பிளே ஆஃப்க்குள் நுழைந்துவிட்டாலும் ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு எதிராக அடுத்தடுத்து பெற்ற தோல்வி, அணியின் Momentum-ஐ நிச்சயம் பாதித்திருக்கும். மிடில் ஆர்டர் பேட்டிங் கொலாப்ஸ், தோனியின் பேட்டிங் திறன், ஜோஷ் ஹேசில்வுட் பவுலிங் என பல விஷயங்கள் இப்போது கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. பிளே ஆஃப் செல்வதற்குள் அணியில் உள்ள குறைகளை களைய தோனி இந்நேரம் வியூகங்களை வகுத்துக் கொண்டிருப்பார் என நம்பலாம். இந்த இக்கட்டான சூழலில் தான், ஒரு முக்கியமான அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

 முதுகில் காயம்

முதுகில் காயம்

அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய ஆல் ரவுண்டர் சாம் கர்ரன், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்! அவருக்கு lower-back injury ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடரில் இருந்து டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக அவரது சகோதரர் டாம் கர்ரன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சாம் கர்ரனுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் முதுகில் காயம் இருப்பது உறுதியானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் இங்கிலாந்து திரும்பவிருக்கிறார்.

 தோனி ஆலோசனை

தோனி ஆலோசனை

பிராவோ இல்லாத போட்டிகளில், சாம் கர்ரன் தான் முக்கிய ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக இருந்தார். ஆனால், இப்போது சாம் வெளியேறி இருப்பதால், பிராவோவை அதிகம் நம்பியிருக்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பிராவோவுக்கும் காயம் ஏற்பட்டால், அணியின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இதனால், பிராவோ மற்றும் அணியின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசியுள்ள தோனி, வியூகங்களை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் விரிவாக ஆலோசித்து இருக்கிறாராம்.

Story first published: Tuesday, October 5, 2021, 19:46 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+