பத்ரிக்கு காயம்... அவுட்... ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்கு பின்னடைவு!
பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலிருந்து காயம் காரணமாக பிரபல சுழல் பந்துவீச்சாளர் சாமுவேல் பத்ரி விலகியுள்ளார்.
விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் சாமுவேல் பத்ரி இடம் பெற்றிருந்தார்.

சுழல் பந்துவீச்சாளரான பத்ரி டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் பெங்களூர் அணிக்கு பந்து வீச்சில் பலம் சேர்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், டி20 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் அவரது வலது கை மணிக்கட்டு மற்றும் தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது.
பத்ரியின் காயம் குணமடையாததை அடுத்து மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டாப்ரைஸ் ஷாம்சியை பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே கெயில் நேற்றைய போட்டியில் ஆடவில்லை. அடுத்த போட்டியிலும் ஆடப்போவதில்லை. புதிதாக பிறந்த அவரது குழந்தையை பார்க்க மே.இ.தீவுகளுக்கு அவர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications