For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பந்தில் நடுவர் கொடுத்த டிவிஸ்ட்.. ராஜஸ்தானுக்கு ஆப்பு வைத்த சந்தீப் சர்மா.. SRH த்ரில் வெற்றி

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான்,ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்தது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது.

இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று ராஜஸ்தான் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஐதராபாத் அணியிடம் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய அன்மோல்பிரித் சிங், அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். இதே போன்று அபிஷேக் சர்மாவும் 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். ஐதராபாத் அணி 12.4 வது ஓவரில 116 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து பதிலடி கொடுத்தது.

Sandeep sharma no ball costs RR 2 points at nail bitting thriller vs srh

நடுவரிசையில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி, 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் சாஹல் விளாசிய ஒரே ஓவரில் கிளாசெனும் , கேப்டன் மார்க்கரம் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுக்க, ஐதராபாத் அணிக்கு மீண்டும் சறுக்கல் ஏற்பட்டது.

அப்போது களத்திற்கு வந்த கிளன் பிலிப்ஸ், ஆட்டத்தின் 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் மற்றும் பவுண்டரி அடிக்க மீண்டும் ஐதராபாத் அணி ஆட்டத்திற்குள் வந்தது. எனினும் , அதே ஓவரில் பிலிப்ஸ் 7 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். இதனால் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சந்தீப் சர்மா கடைசி ஓவரில் வீசினார்.

இதில் முதல் பந்தில் 2 ரன்களும், 2வது பந்தில் சிக்சரும், 3வது பந்தில் டபுள்சும், 4வது மற்றும் 5வது பந்தில் சிங்கிள்ஸ் அடிக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் அப்துல் சமத் கேட்ச் ஆனார். ஆனால், இது நோ பால் என அறிவிக்கப்பட்டது. இது மீண்டும் ஆட்டத்தில் டிவிஸ்டை ஏற்படுத்தியது. இதனால் அப்துல் சமத்துக்கு ஃபிரி ஹிட் கிடைத்தது. இதில் அவர் சிக்சர் அடிக்க, ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, May 7, 2023, 23:21 [IST]
Other articles published on May 7, 2023
English summary
Sandeep sharma no ball costs RR 2 points at nail bitting thriller vs srh கடைசி பந்தில் நடுவர் கொடுத்த டிவிஸ்ட்.. ராஜஸ்தானுக்கு ஆப்பு வைத்த சந்தீப் சர்மா.. SRH த்ரில் வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+