Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவின் மனம் கவர்ந்த கள்ளி? சஞ்சனாதான் மணப்பெண்ணா... சிம்ப்டம்ஸ் எல்லாம் அப்படித்தான் சொல்லுது!

டெல்லி : வரும் 14, 15 ஆகிய தேதிகளில் இந்திய முன்னணி பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா கோவாவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவரது வருங்கால மனைவி குறித்து அவர் எந்த தகவலையும் வெளிப்படுத்தாத நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை அவர் மணமுடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பும்ரா குறித்த சஞ்சனாவின் பழைய ட்வீட்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அவை இப்போது வைரலாகி வருகிறது.

பும்ரா விலகல்

பும்ரா விலகல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா 4வது போட்டியிலிருந்து விலகியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது திருமணம் வரும் 14, 15 தேதிகளில் கோவாவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பும்ரா பிசியோ பிசி

பும்ரா பிசியோ பிசி

இதையொட்டி அவர் தனது திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் பங்கேற்வில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தான் திருமணம் செய்யவுள்ள தனது வருங்கால மனைவி குறித்து எந்த தகவலையும் வெளியிடாததால் இதுகுறித்த பல்வேறு யூகங்களும் உலா வந்துக் கொண்டுள்ளது.

விடுப்பில் சஞ்சனா

விடுப்பில் சஞ்சனா

முதலில் தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரனை அவர் மணமுடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தகவலை அனுபமாவின் தாய் மறுத்துள்ளார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை பும்ரா மணக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பும்ரா கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு எடுத்துள்ள நிலையில், சஞ்சனாவும் தற்போது விடுப்பில் உள்ளது இந்த தகவலை உறுதிப்படுத்தும்விதமாக உள்ளது.

வைரலான சஞ்சனா பழைய ட்வீட்கள்

வைரலான சஞ்சனா பழைய ட்வீட்கள்

இந்நிலையில் பும்ரா -சஞ்சனாவின் திருமணம் குறித்த தகவல் வெளியானவுடன் ரசிகர்கள், பும்ரா குறித்த சஞ்சனாவின் பழைய ட்வீட்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த ட்வீட்கள் மிகுந்த வைரலுடன் உலா வந்துக் கொண்டுள்ளது. பும்ரா குறித்த இஎஸ்பிஎன் ட்வீட்டுக்கு சஞ்சனாவின் கமெண்ட் இதுபோல வைரலாகியுள்ளது.

பாராட்டிய சஞ்சனா

கடந்த டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த ட்வீட்களை சஞ்சனா செய்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பும்ராவின் அரைசதத்திற்கும் சஞ்சனா பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்களை தற்போது ரசிகர்கள் பகிர்வதுடன் அதிகமானோர் லைக்குகளையும் கொடுத்து வருகின்றனர்.

Story first published: Wednesday, March 10, 2021, 13:01 [IST]
Other articles published on Mar 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+