Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன டா இது ஆச்சரியம்.. வானும் -மண்ணும் பிரெண்ட்ஷிப் ஆனது.. டிவிட்டரில் ஜடேஜா, மஞ்சரேக்கரின் நட்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவும் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கரும் எதிரிகளாக இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

ஒரே நாட்டை சேர்ந்த வீரர்களாக இருந்தாலும், இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. அதற்கு காரணம் 2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மோதியபோது சஞ்சய் மஞ்சரேக்கர் சொன்ன ஒரு வார்த்தை தான்.

பொதுவாக கிரிக்கெட் வர்ணனையாளர்களும் களத்தில் விளையாடும் வீரர்களும் நண்பர்களாக இருப்பார்கள். சில சமயம் குறிப்பிட்ட வீரர்களை விமர்சனம் செய்யும் போது அந்த வீரர்கள் பதிலடி தருவார்கள்.

ரசிகர்களுக்கு பிடிக்காது

ரசிகர்களுக்கு பிடிக்காது

அப்படித்தான் சஞ்சய் மஞ்சரேக்கருக்கும் ஜடேஜாவுக்கும் மோதல் ஆரம்பித்தது

சஞ்சய் மஞ்சரேக்கர் அவர் விளையாடிய காலத்தில் நல்ல பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தார். கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும்போது சில சமயம் அறிவு சார்ந்த கருத்துக்களை கூறினாலும், மற்ற சமயத்தில் ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் பேசுவார். இதனால் சஞ்சய் மஞ்சரேக்கர் கிரிக்கெட் வர்ணனையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்தனர்.

பதிலடி தந்த ஜடேஜா

பதிலடி தந்த ஜடேஜா

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அவர் இந்தியா விளையாடும் கிரிக்கெட் வர்ணனையில் இடம் பெறாமல் இருந்தார். அதற்கு முக்கிய காரணம் மேலே சொன்ன போட்டியின் போது வர்ணனையில் இருந்த மஞ்சரேக்கர் ஜடஜாவை ஒரு சாதாரண துகள்கள் போன்ற கிரிக்கெட் வீரர் என்று குறிப்பிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜடேஜா நான் உங்களை விட இரு மடங்கு அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.

திருப்புமுனை

திருப்புமுனை

இன்னும் விளையாடுகிறேன். கிரிக்கெட்டில் சாதித்தவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை பேதியை நான் கேட்டது போதும் என்று ஜடேஜா காட்டமாக பதில் அளித்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் போது ஆட்டநாயகன் விருது வென்ற ஜடஜாவை சஞ்சய் மஞ்சரேக்கர் பேட்டி எடுத்தார். அப்போது ஜடேஜா என்னிடம் பேச உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று அவர் கேட்டார். அதற்கு ஜடேஜா சிரித்துக் கொண்டு நிச்சயமாக என்று பதில் அளித்தார்.

டிரெண்டான நட்பு

டிரெண்டான நட்பு

இந்த நிலையில் ஜடேஜா காயம் அடைந்து வீட்டில் இருக்கும் நிலையில் சஞ்சய் மஞ்சரேரக்கர் கிரிக்கெட் வர்ணனை செய்திருக்கும் காட்சியை புகைப்படம் எடுத்து என்னுடைய நண்பரை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். இதுக்கு பதில் அளித்த சஞ்சய் மஞ்சரேக்கர் உங்களை விரைவில் கிரிக்கெட் களத்தில் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் என்று நட்புடன் கூறி இருக்கிறார். ஜடேஜாவும் மஞ்சரேக்கரின் இந்த பேச்சு ட்விட்டரில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Story first published: Friday, September 30, 2022, 12:38 [IST]
Other articles published on Sep 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+