வெற்றி மிதப்பில் தள்ளாடினார்கள்.. இந்தியா சறுக்கியது எங்கு தெரியுமா ? சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்தது.
இதன் மூலம் பத்து ஆண்டுகளில் இந்திய அணி மூன்றாவது முறையாக சொந்த மண்ணில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரக்கர் இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய மிதப்பில் இந்தூர் டெஸ்ட் போட்டியை அணுகியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வெற்றி மிதப்பு
இது குறித்து பேசிய அவர் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தார்கள். ஆடுகளும் எப்படி இருக்கிறது என்பதை கணிக்காமலேயே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க முயற்சி செய்தார்கள். இது கொஞ்சம் சறுக்களை ஏற்படுத்தியது. ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எண்ணற்ற அதிரடி ஷாட்டுகளை விளையாடினார்கள்.

போட்டி மாறியது
ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு ஏற்கனவே தெரியும் என்ற தைரியத்தில் விளையாடியது தோல்விக்கு காரணம் என நான் கருதுகிறேன். எனினும் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தின் போக்கை இந்தியா மாற்றியது. ஜடேஜா தான் அதிகமாக முயற்சி செய்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என அனைவரும் நினைத்தோம். திடீரென்று அஸ்வினும் உமேஷ் யாதவும் போட்டியை தலைக்கீழ் மாற்றினார்கள்.

பாராட்டு
இவ்விருவரையும் பந்து வீச்சுக்கு அழைத்த ரோகித் சர்மாவின் முடிவு பாராட்டத்தக்கது. அஸ்வின் களத்தில் நின்ற சிறந்த பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைத்தது இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. மேலும் உமேஷ் யாதவ் கேமரான் கிரீன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்தது. எனினும் இதனை பயன்படுத்திக் கொள்ளாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டும் மோசமாக விளையாடி தோல்வியை தழுவி விட்டார்கள் என சஞ்சய் மஞ்ச தேக்கர் கூறியுள்ளார்.

கடைசி டெஸ்ட்
அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆவது இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்தை கனித்து சரியான முறையில் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான முறையில் ஆடுகளம் அமைக்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications