Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செமிபைனலில் இந்த 2 பவுலர்கள் வேஸ்ட், செட்டே ஆகமாட்டாங்க.... மறுபடியும் ஆரம்பித்த மஞ்சரேக்கர்...!

Recommended Video

WORLD CUP 2019 | கப்பல் ஏறும் இந்திய அணியின் மானம்.. பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?- வீடியோ

லண்டன்: ஜடேஜாவிடம் வாங்கி கட்டிக் கொண்ட சூடு ஆறுவதற்குள் மேலும் 2 பவுலர்களை விமர்சித்து அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார் வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர்.

இங்கிலாந்து உலக கோப்பை கிரிக்கெட் இறுதிகட்டத்தில் இருக்கிறது. அரையிறுதி ஆட்டங்கள் வரை வந்துவிட்டன. மான்செஸ்டரில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது.

அந்த ஆட்டத்தில் ஒரே ஒரு மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

போட்டியில், நியூசிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. களத்தில் 50வது அரை சதத்தை நிறைவு செய்த ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் லாதம் 3 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

டுவிட்டர் பதிவு

டுவிட்டர் பதிவு

இந் நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் திறமையை விமர்சித்திருக்கிறார் வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்ச ரேக்கர். டுவிட்டரில் அவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

ரிஸ்க் தேவையில்லை

போட்டியில் 5 பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டனர். இவ்வளவு பவுலர்களுடன் ரிஸ்க் எடுக்க தேவையில்லை. அதிலும் அவர்களில் 2 பந்துவீச்சாளர்கள் இந்த இந்திய அணிக்கு தேவையில்லாதவர்கள். அவர்கள் அணிக்கு செட் ஆகாத பந்துவீச்சாளர்கள் என்றார்.

இருவர் யார்?

இருவர் யார்?

ஆனால் அவர் குறிப்பிட்டிருக்கும் அந்த இருவர், யார் என்று தெரிய வில்லை. கண்டிப்பாக ஒன்று ஜடேஜாவாக இருக்கும் மற்றொன்று ஹர்திக் பாண்டியா அல்லது சாஹலாக இருக்கும். ஏற்கனவே, சஞ்சய் மஞ்சரேக்கர் கூறிய கருத்துக்கு, ரவீந்திர ஜடேஜா பதிலடி கொடுத்து ள்ளார். அதாவது, ஜடேஜா போன்று, அவ்வப்போது அணியில் இடம் பெறும் வீரர்களின் ரசிகன் தாம் அல்ல என்று தெரிவித்திருந்தார்.

வறுத்தெடுத்த ஜடேஜா

வறுத்தெடுத்த ஜடேஜா

இந்த கருத்துக்கு, சமூக வலை தளத்தில் ஜடேஜா வெளுத்து வாங்கினார். நீங்கள் விளையாடியுள்ள போட்டிகளை காட்டிலும், 2 மடங்கு அதிகமான போட்டிகளில் விளையாடி உள்ளேன், சாதித்தவர்களுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

அவதூறு பேச்சு

அவதூறு பேச்சு

வீரர்களை மட்டுமல்ல.. அணியையும் சஞ்சய் மஞ்சரேக்கர் அவதூறாக பேசி வந்தார். குறிப்பாக, கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை அணிக்கு ஆதரவாக நடந்து கொண்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை கடுமையாக சாடினார். தோனியின் ஆட்டம் குறித்தும் அவதூறாக பேசினார்.

கொந்தளிக்கும் ரசிகர்கள்

கொந்தளிக்கும் ரசிகர்கள்

தொடர் விமர்சனத்தால் அதிருப்தியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் உலக கோப்பைக்கான வர்ணனையாளர் பணியில் இருந்து மஞ்ச ரேக்கரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அது தொடர்பாக, கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்து பெற்றுள்ளனர்.

Story first published: Wednesday, July 10, 2019, 12:18 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+