தோற்றாலும் கவலை இல்லை.. அந்தரத்தில் தொங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு.. மஞ்ச்ரேக்கர் நம்பிக்கை
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வரும் சூழலில், இப்போட்டியில் இந்தியா தோற்றாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. கடைசி போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் தொடங்கியது.
2 - 1 என வலுவான முன்னிலையுடன் இருக்கும் இந்திய அணி இப்போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். இதே போல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.

ஆஸி, அணி அதிர்ச்சி
ஆனால் அதற்கெல்லாம் எதிர்மாறாக நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி ரன் வேட்டை நடத்தி வருகிறது. அந்த அணியின் ஓப்பனிங் வீரர் உஸ்மான் கவாஜா சதம் அடிக்க, கேமரூன் க்ரீன் அரைசதத்தை நெருங்கி வருகிறார். இதனால் முதல் நாளின் முடிவில் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்களை குவித்துள்ளது.

இக்கட்டான சூழல்
2வது நாளில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியா வெற்றி பெறுவது கடினமாகிவிடும். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும். ஏனென்றால் நியூசிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை ஒரு போட்டியிலாவது
தோற்றால் மட்டுமே இந்தியாவால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

மஞ்ச்ரேக்கர் ஆதரவு
இந்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி இப்போட்டியில் சொதப்பினாலும் இறுதி சுற்றுக்கு செல்லும்.ஏனென்றால் தற்போது இருக்கும் சூழலில் இலங்கை அணியால் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்வது கடினமான ஒன்றாகும்.

பதற்றம் இருக்கலாம்
இன்னும் பலருக்கும் பதற்றம் என்பது இருக்கும். ஆனால் கவலைப்பட தேவையில்லை, இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்தியா தனது இடத்தை உறுதி செய்துக்கொண்டுவிட்டது. முன்பை போல இலங்கை அணி தற்போது பலமாக இல்லை. அவர்களால் அதிகபட்சமாக ஒரு வெற்றியை பெற முடியுமே தவிர, ஒயிட் வாஷ் செய்ய முடியாது எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications