Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரோஹித், கோலிக்காக முடிவுகளை எடுக்காதீர்கள்".. ஜெய்ஸ்வால் நீக்கத்தால் பிசிசிஐ-ஐ சாடிய மஞ்ரேக்கர்

சென்னை: இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்காக மட்டும் முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் பிசிசிஐ-ஐ சாடியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்திருந்தார். இது அவர் விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் பெற்ற 2வது சதமாகும். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 116 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஆனால், விராட் கோலி அணிக்குத் திரும்பியதால் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு மிகவும் மோசமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

Sanjay Manjrekar Criticizes BCCI Over Yashasvi Jaiswal Omission Questions Rohit Sharma s Selection

இது குறித்துப் பேசிய மஞ்ரேக்கர், "ஜெய்ஸ்வாலுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவரை நீக்கியது அநீதியானது. அதேநேரத்தில், ரோஹித் சர்மாவின் தேர்வு குறித்தும் தேர்வுக்குழுவிடம் நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான திட்டத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார் என்று தேர்வுக்குழுவினர் உண்மையிலேயே நம்பினால் மட்டுமே அவரை அணியில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அவரது இடத்தை வேறு ஒரு தகுதியான இளம் வீரருக்கு வழங்கியிருக்க வேண்டும்" என்று கூறினார்.

“மிக நீண்ட இன்னிங்ஸ்”.. வாரணாசியில் திருமணம் செய்து கொண்ட இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்!

“மிக நீண்ட இன்னிங்ஸ்”.. வாரணாசியில் திருமணம் செய்து கொண்ட இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்!

மேலும், "பெரிய வீரர்களின் செல்வாக்கிற்குப் பயந்து முடிவுகளை எடுப்பது இந்திய கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு பெரிய சாபக்கேடு. தேர்வு என்பது எப்போதும் விராட் கோலி, ரோஹித் சர்மா அல்லது ஜஸ்பிரித் பும்ராவுக்கு எது சிறந்தது என்பதைப் பொறுத்து இருக்கக் கூடாது. அது எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு எது நல்லது என்பதைப் பொறுத்தே அமைய வேண்டும்" என்று பிசிசிஐ-க்கு எதிராக மஞ்ரேக்கர் குரல் கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜூலை 14 அன்று தொடங்க உள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணியில் ஹோட்டல் ரூம் சண்டை.. கணவரை தங்க வைத்த விவகாரத்தால் கடுப்பான கேப்டன்

பாகிஸ்தான் மகளிர் அணியில் ஹோட்டல் ரூம் சண்டை.. கணவரை தங்க வைத்த விவகாரத்தால் கடுப்பான கேப்டன்
Story first published: Thursday, June 25, 2026, 16:06 [IST]
Other articles published on Jun 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+