Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை ஜெயிக்கனும்னா அவங்க வேணும்.. 2 வீரர்களால் நிர்பந்தத்தில் சிக்கிய ரோகித்..மஞ்ரேக்கர் வார்னிங்

கொச்சி: ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு வீரர்களை குறிவைத்து எடுத்தே தீர வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து அணிகளையும் சேர்த்து மொத்தம் 87 வீரர்களுக்கான ஏலமாக இது நடைபெறவுள்ளது. இந்த இடங்களை நிரப்ப 405 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மினி ஏலத்தில் 5 முறை சாம்பியன்ஸான மும்பை இந்தியன்ஸ் அணி யாரை தேர்வு செய்யப்போகிறது என்பது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. மிகவும் வெற்றிகரமான மும்பை அணி, கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. லீக் சுற்றில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது தான் ரசிகர்களின் பெரும் கவலை.

மும்பைக்கு கட்டாயம்

மும்பைக்கு கட்டாயம்

எனவே விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க படு தீவிரமாக களமிறங்குகின்றனர். இதற்காக அந்த அணியில் இருந்து 13 வீரர்களை கழட்டிவிடுவதாக அறிவித்தது. இதில் கெயீரன் பொல்லார்ட் ஓய்வு பெற்றார். முருகன் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், டைமல் மில்ஸ் என பல முன்னணி வீரர்களை கழட்டிவிட்டது. இதனால் அந்த அணியிடம் ரூ.20.55 கோடி மீதம் உள்ளது.

மஞ்ரேக்கர் அட்வைஸ்

மஞ்ரேக்கர் அட்வைஸ்

இந்நிலையில் மும்பைக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், மும்பை அணியில் தற்போது உள்ள குறையே ஸ்பின்னர்கள் தான். பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு ஓரளவிற்கு உள்ள போதும் ஸ்பின்னர்களே இல்லை. ஒவ்வொரு அணிக்கும் ரஷித் கான், சுனில் நரேன் போன்றவர்கள் தேவை. அதன்படி பார்த்தால் மும்பை அணி ஆடம் ஜாம்பா, அடில் ரஷித் ஆகிய லெக் ஸ்பின்னர்களை குறிவைத்தே ஆக வேண்டும்.

என்ன காரணம்

என்ன காரணம்

மும்பையில் இருந்த ராகுல் சஹார், மயங்க் மார்க்காண்டே, முருகன் அஸ்வின் போன்ற வீரர்கள் ஏலத்திற்கு வந்துவிட்டனர். குறிப்பாக ராகுல் சஹாரை விட்டிருக்கவே கூடாது. அவர்களையே விட்டிருக்கிறார்கள் என்றால், பெரிய அயல்நாட்டு ஸ்பின்னர்களுக்கு செல்ல வேண்டும். தென்னாப்பிரிக்காவின் டாப்ரிஸ் ஷாம்ஸி கூட பொருத்தமாக இருப்பார். இவர்களில் யாரையும் எடுக்கவில்லை என்றால் மும்பைக்கு சிக்கல் தான் என கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 21, 2022, 9:38 [IST]
Other articles published on Dec 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+