Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொல்லார்ட்-ஐ இப்படி ஆக்கிட்டாங்களே.. மும்பை அணி செய்த பெரும் தவறு..சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு

மும்பை: மும்பை அணி வீரர் கெயீரன் பொல்லார்ட் குறித்து முன்னாள் வீரர் சஞ்ச மஞ்ச்ரேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தான் மும்பை அணி பெரும் அவமானத்தை தவிர்க்க முடியும்.

 முக்கிய போட்டிகள்

முக்கிய போட்டிகள்

நடப்பு தொடரில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் மும்பை அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இன்றைய போட்டியிலும் தோல்வியடைந்துவிட்டால், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 7 தோல்வியை சந்தித்த அணியாக மாறும். இதே போல ப்ளே ஆஃப் சுற்றிலும் நுழைய முடியாது.

மும்பையின் தவறுகள்

மும்பையின் தவறுகள்

இந்நிலையில் மும்பை அணியின் தவறுகள் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். பொல்லார்ட் குறித்து மும்பை அணி கருத்தில் கொள்கிறார்களா என்றே தெரியவில்லை. அவர் குறைந்தது 3 ஓவர்களையாவது வீச வேண்டும். இக்கட்டான சூழல்களில் மற்ற பவுலர்களை விட பொல்லார்ட் சிறப்பாக செயல்படக் கூடியவர்.

பேட்டிங்கில் மட்டுமே

பேட்டிங்கில் மட்டுமே

ஒருவேளை பேட்டிங்கில் மட்டும் களமிறங்கினாலும், டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டும். கடந்த 2 சீசன்களில் இந்த முறை தான் மும்பை அணிக்கு பொல்லார்ட் அதிகம் தேவைப்படுகிறார். எனவே அவரின் ஆட்டத்தை சீக்கிரமாக தொடங்க வேண்டும். அப்போது தான் மும்பை அணி வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்கோர் விவரம்

ஸ்கோர் விவரம்

பொல்லார்ட் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 82 ரன்களை அடித்துள்ளார். பவுலிங்கில் ஓவருக்கு 10 ரன்கள் என்ற எகானமியில் உள்ளார். ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் விட்டுக் கொடுத்துள்ளார். எப்போதும் இல்லாத அளவாக இந்தாண்டு அவரின் பேட்டிங் சராசரி 16.4 ரன்கள் மட்டுமே ஆகும்.

Story first published: Thursday, April 21, 2022, 14:55 [IST]
Other articles published on Apr 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+