Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை சீண்டிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..! இவங்க 2 பேர் தவிர பேட்டிங்கில் நம்பிக்கை இல்லையாம்..ரொம்ப வீக்

லண்டன் : கோலியை சீண்டிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..! இவங்க 2 பேர் தவிர பேட்டிங்கில் நம்பிக்கை இல்லையாம்..ரொம்ப வீக்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் பும்ரா, கே எல் ராகுல், ரிஷப் பந்த்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இல்லை. லண்டன் ஓவல் ஆடுகளம் ஆஸ்திரேலியாவுக்கு தான் சாதகமாக இருக்கும் என ஏற்கனவே பலரும் கணித்துள்ளனர்.

Sanjay manjrekar says india can reliable on only 2 batsman in icc wtc final

இந்த நிலையில் இந்த தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பந்துவீச்சு தரமாக இருப்பதை பார்த்தேன். ஆனால் இந்தியாவின் ஒரே பிரச்சினை அதனுடைய பேட்ஸ்மேன்கள் தான். இங்கிலாந்து சூழலில் நிச்சயமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடிகளை கொடுக்கும்.

ஆனால் நான் பேட்டிங்கை நினைத்து தான் மிகவும் கவலையாக இருக்கிறேன். இந்திய அணியின் டாப் ஆறு வீரர்களை நீங்கள் பாருங்கள். அவர்களுடைய ஃபார்மையும் பாருங்கள். இங்கிலாந்தில் அவர்கள் விளையாட போகிறார்கள். இதில் ரோகித் சர்மா, புஜாரா ஆகியோரை தவிர வேறு யாரையும் பார்த்தால் எனக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை.

இவர்களை மட்டும் தான் நம்பி இந்திய அணி விளையாட உள்ளது. ரோகித், புஜாராவை தவிர மற்ற பேட்ஸ்மேன்களை பார்த்தால் பெரிய கேள்வி குறிதான் இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் பந்துவீச்சு தான் ஒரே வழி. ஒரு டெஸ்ட் போட்டியில் சரிவை சந்தித்த பிறகு மீண்டும் போட்டிக்குத் திரும்புவது வாய்ப்பு குறைவு தான்.

இந்த டெஸ்டில் நீங்கள் முதல் இரண்டு நாட்களில் சரியாக விளையாடாமல் அதன் பிறகு ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கண்டால் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். இதுவே ஆஸ்திரேலியாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் பலமாக இருக்கிறார்கள். எனினும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மீது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்துவார்கள் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, June 6, 2023, 7:01 [IST]
Other articles published on Jun 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+