அவருக்கு ஒரு நியாயம்.. இவருக்கு ஒரு நியாயமா? கொஞ்சம் கூட சரியில்ல.. சஞ்சய் மஞ்சரேக்கர் சரமாரி கேள்வி
கவுகாத்தி : இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், ரோகித் சர்மாவின் நடவடிக்கை பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
குறிப்பாக தேர்வில் ரோகித் சர்மா எடுத்த நடவடிக்கை மூலம் இந்திய அணி டி20 உலககோப்பையில் அடைந்த தோல்வியில் இருந்து எந்த பாடத்தையும் கற்று கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
தொடக்க ஜோடியில் தவறு, விக்கெட் கீப்பர் யார், பினிஷர் யார் என்று கடைசி வரை இந்திய அணி டி20 உலககோப்பையில் மாற்றி கொண்டே இருந்தது.

10 மாதம்
தற்போது 50 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இதற்கான அணியை 10 மாதத்திற்குள் தயார் செய்ய வேண்டும். ஆனால் பழைய குருடி கதவை திறடி என்பது போல் ரோகித் சர்மா மீண்டும் பல தவறான முடிவை எடுத்துள்ளார். கேஎல் ராகுலுக்காக இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனை நீக்கிவிட்டார்.

மஞ்சரேக்கர் கேள்வி
இதே போன்று சுழற்பந்துவீச்சு, நடுவரிசை என இரண்டிலும் எந்த மாற்றமும் அணியில் இல்லை. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் ரோகித் சர்மா அணி தேர்வு குறித்து பேட்டி அளித்துள்ள மஞ்சரேக்கர், சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யாதது குறித்த பின்னணி கூட என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இஷான் கிஷனுக்கு ஒரு நியாயமா?
சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனுக்கு ஏன் அது போன்ற ஒரு வாய்ப்பை கொடுக்கவில்லை.அவர் இருந்தால் இந்திய அணியில் தொடக்க வீரராக வலது, கை இடது கை பேட்ஸ்மேன்கள் என்ற காம்பினேஷன் உங்களுக்கு கிடைத்திருக்குமே.

குல்தீப் ஏன் இல்லை
இதே போன்று குல்தீப் யாதவை அணியில் சேர்க்காததும் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. என்னுடைய அணியில் எப்போதுமே குல்தீப் இருப்பார். வங்கதேசத்துக்கு எதிராக அவர் ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்தும் கூடவா இந்திய அணியில் குல்தீப்பை சேர்க்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாஹல், 10 ஓவ வீசி 58 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications