Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் சறுக்கலுக்கு அவர் மட்டுமே காரணம்.. ஒரு பயனும் இல்லை.. சீனியர் வீரரை விளாசிய மஞ்ச்ரேக்கர்

மும்பை: இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணத்தை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்விக்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக கூறப்படும் நிலையில் ப்ளேயிங் 11ல் செய்த தவறே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் நம்பிக்கை

இந்திய அணியின் நம்பிக்கை

சவுத்தாம்டன் பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் உதவும், அங்கு மழைப்பொழிவு வேறு உள்ளதால் ஸ்பின்னர்களை பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் அறிவுரை கூறினர். ஆனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி தனது முடிவில் உறுதியாக இருந்தது.

பொய்யான திட்டம்

பொய்யான திட்டம்

குறிப்பாக ரவீந்திர ஜடேஜா ஏன் சேர்க்கப்பட்டார் என்ற சர்ச்சை எழுந்தது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா 6வது விக்கெட்டில் கூட பேட்டிங்கிற்கு உதவுவார், அவரின் பந்துவீச்சுக்காக முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக்கூறப்பட்டது. ஆனால் இந்திய அணியின் கணக்கு பொய்யானது. ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 15 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 16 ரன்களும் மட்டுமே எடுத்தார்.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவை சேர்த்தது தான் என மன்ஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்த ஆட்டத்திற்கு இந்தியா எப்படி களமிறங்கியது என்பதை பார்க்க வேண்டும். அந்த பிட்ச்-ன் தன்மை, வானிலை பார்த்த பிறகும், பேட்டிங்கிற்காக ஜடேஜாவை சேர்த்தனர். ஜடேஜா பந்துவீச்சில் தான் ஸ்பெஷலிஸ்ட். ஆனால் அவரை பேட்டிங்கிற்காக எடுத்தது தான் இந்தியாவுக்கு எதிராக போனது.

தவறான முடிவு

தவறான முடிவு

பிட்ச் ஒருவேளை வறண்டு காணப்பட்டு பந்தில் டேர்னிங் இருந்திருந்தால் ஜடேஜாவை சேர்த்திருக்கலாம். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. பேட்டிங்கிற்காக ஒரு சிறந்த பேட்ஸ்மேனை அணிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஜடேஜாவை கொண்டு வந்தது தான் இந்திய அணிக்கு எதிராக முடிந்தது எனக்கூறியுள்ளார்.

Story first published: Friday, June 25, 2021, 16:54 [IST]
Other articles published on Jun 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+